Site icon Automobile Tamilan

ரூ. 9.75 லட்ச விலையில் அறிமுகமானது ஸ்கோடா ரேபிட் ஓனிக்ஸ் பதிப்பு

இந்தியாவில், அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய கார்களின் விலை 9.75 ரூபாயாகும். (எக்ஸ்-ஷோ ரூம் விலை). புதிய ஸ்பெஷல் எடிசன் ஸ்கோடா ரேபிட் ஓனிக்ஸ் பதிப்புகள், எதிர்வரும் விழாகாலத்தை முன்னிட்டு மார்கெட்களுக்கு வந்துள்ளது. இது வாடிக்கையாளர்களை வெகுவாக ஈர்க்கும் என்று தெரிகிறது.

இந்த ஸ்பெஷல் எடிசன் கார்கள், லாபிஸ் ப்ளூ மற்றும் காண்டி ஒயிட் நிறங்களில் வெளியாகியுள்ளது. இத்துடன் வெளிப்புறத்திலும், உட்புறத்திலும் சில காஸ்மெடிக் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடலில் மெக்கனிக்கல் மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை. காரின் உட்புற மேம்பாடுகளை பொறுத்தவரை, ரேபிட் ஓனிக்ஸ் பதிப்புகள் பிளாக் டிசைன்களில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் பிளாக் பினிஷ்டு பட்டர்பிளே கிரில்களையும் உள்ளடக்கியதாக இருக்கும்.

மேலும் இந்த ஸ்பெஷல் எடிசன் வெர்சன்கள் கிளாஸ் பிளாக் பினிஷ் செய்யப்பட்ட 16 இன்ச் அலாய் வீல்களுடன் ஒரே மாதிரியான வளைவு கவர்கள் மற்றும் பின்புற பார்வை கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ளது. இத்துடன் பிளாக் பினிஷ்டு பி-பில்லர்ஸ், சைடு மோல்டிங் மற்றும் டிராங்க் லிப் களுடன் அழகு படுத்தப்பட்டுள்ளது.

காரின் உட்புறத்தில், ஸ்கோடா ரேபிட் ஓனிக்ஸ் பதிப்பின் கேபின்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆனாலும், காண்டிராஸ்ட்களுடன் கூடிய டூயல்-டோன் எப்போய்-சான்ட் உள் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. சீட்கள் மரத்தால் செய்யப்பட்டது போன்ற தோற்றம் அளிக்கும் டிசைனில், லேதெரெட்டே அப்ஹால்ஸ்டிரி செய்யப்பட்டுள்ளது. சிறப்பு எடிசன்களிலும் லெதர் சுற்றப்பட்ட பிளாட்-பாட்டம் ஸ்டீயரிங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த ஸ்டீயரிங்கள் பிளாக் தையல்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. டெக்ஸ்டைல் மேட்களுடன் பிளாக் தையல் மற்றும் குரோம் உபகரணங்களுடன் கேபின் முழுவதும் அழகுபடுத்தப்பட்டுள்ளது.

மற்றொரு அப்டேட்டாக, 6.5 இன்ச் டச்ஸ்கிரின் இன்போடேய்ன்மென்ட் சிஸ்டம்களுடன் ஸ்மார்ட்லிங்க் டெக் பொருத்தப்பட்டுள்ளது, இது நீங்கள் தேவையான அப்ளிகேஷன் தேர்வு செய்து கொள்ள உதவும், ஸ்மார்ட் போன் அப்ளிகேஷன்கள் நேவிகேஷன் மற்றும் USB, AUX மற்றும் ப்ளூடூத் ஆப்சன்களையும் தேர்வு செய்து கொள்ளலாம். இந்த சிஸ்டம், மிரர்லிங்க், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்டிராய்டு ஆட்டோ ஆகியவற்றை ஏற்று கொள்ளும் வகையில் இருக்கும். இதுமட்டுமின்றி ஆட்டோ கிளைமேட் கண்ட்ரோல், 12 வோல்ட் பவர் கொண்ட சாக்கெட்கள் முன்புறமும், பின்புறமும் பொருத்தப்பட்டுள்ளது. முன்புற கதவில் பிளாக் வேஸ்ட் பின்-களும் பொருத்தப்பட்டுள்ளது. ஸ்கோடா ரேபிட் ஓனிக்ஸ் பதிப்பில் ஸ்காப் பிளேட் மற்றும் ரியர் வின்ட்ஸ்கிரின் சன்பிளைன்ட்களும் பொருத்தப்பட்டுள்ளது.

 

உபகரணங்களை பொறுத்தவரை, ஸ்கோடா ரேபிட் கார்களில் LED DRL-கள், பிரஜெக்டர்-லென்ஸ் குவாட்ஸ்-கட் ஹெட்லைட்கள், EBDகளுடன் கூடிய ABS , டூயல் ஏர்பேக்ஸ் மற்றும் பல வசதிகளை கொண்டுள்ளது. டீசல் ஆட்டோமேட்டிக் கார்களில், ESC உடன் வெளியாகிறது. மேலும் பெட்ரோல் மற்றும் டீசல் ஆட்டோமேட்டிக் வெர்சன்களில் ஹில் ஹோல்ட் கண்ட்ரோல் இடம் பெற்றுள்ளது.

பவர்டிரெயின்களை பொறுத்தவரை, ஸ்கோடா ரேபிட் ஓனிக்ஸ்களில், 1.5 லிட்டர் டீசல் இன்ஜின்களுடன் 108bhp மற்றும் 1.6 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் 103bhp ஆற்றல் கொண்டதாக இருக்கும். இந்த காரில் மெனுவல் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்சன்களுடன் வெளி வந்துள்ளது. ரேபிட் கார்களின் எரிபொருள் திறன், பெட்ரோல் ஆட்டோமேட்டிக் வகைகளில் 14.84kmpl, டீசல் ஆட்டோமேடிக் வகைகளில் 21.72 kmpl ஆக இருக்கும். ரேபிட் ஓனிக்ஸ் வகைகளும் 4 ஆண்டு சர்வீஸ் கார் மற்றும் வழக்கமான ரோட்சைட் அசிஸ்டுகளுடன் வெளியாகியுள்ளது.

Exit mobile version