ரூ.6.99 லட்சத்தில் ஸ்கோடா ரேபிட் ரைடர் விற்பனைக்கு வெளியானது

0

New Skoda Rapid Rider

தொடக்க நிலை ரேபிட் ஏக்டிவ் காரை விட ரூபாய் ஒரு லட்சம் விலை குறைவாக ஸ்கோடா ரேபிட் ரைடர் சிறப்பு வரையறுக்கப்பட்ட மாடலை இந்நிறுவனம் விற்பனையை அதிகரிப்பதற்கான முயற்சியாக இந்தியாவில் வெளியிட்டுள்ளது.

Google News

ஸ்கோடா ரேபிட் காரில் 1.6 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் பெற்றதாக விற்பனை செய்யப்படுகின்றது. தற்பொழுது வெளியிடப்பட்டுள்ள ரேபிட் ரைடர் 1.6 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மட்டும் கிடைக்க உள்ளது. இந்த என்ஜின் அதிகபட்சமாக 105 ஹெச்பி குதிரைத்திறன் மற்றும் 153 என்எம் டார்க் வழங்குவதுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் மட்டுமே வழங்கப்படுகிறது.

ஸ்கோடா ரேபிட் ரைடர் மாடலில் கேண்டி வைட் மற்றும் கார்பன் ஸ்டீல் என இரு நிறங்களுடன் ஸ்போர்ட்டிவ் தோற்றத்தைக் கொடுக்கும் வகையில் கருப்பு நிற கிரில், கருப்பு நிற பாடி ஸ்டிக்கரிங் ஆகியவற்றுடன் 15 அங்குல அலாய் வீல் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த காரின் இன்டிரியரில், டாஷ்போர்டில்  டூயல் டோன் வழங்கபட்டு, கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களை பெற்றுள்ளது. ஆக்டிவ் வேரியண்ட் போலவே,  ரிமோட் சென்ட்ரல் லாக்கிங், முன் மற்றும் பின்புற சென்டர் ஆர்ம்ரெஸ்ட், டில்ட் டெலிஸ்கோபிக் பவர் ஸ்டீயரிங், 2-டின் ஆடியோ சிஸ்டம், நான்கு ஸ்பீக்கர்கள் மற்றும் பின்புற இருக்கைகளுக்கு ஏசி வென்ட்கள் போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது.

ரேபிட் ரைடரில் பாதுகாப்பு அம்சங்களில் ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார், கண் கூசுவதனை தடுக்கும் ரியர்வியூ மிரர், இரட்டை ஏர்பேக்குகள், ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் (ஏபிஎஸ்), டைமருடன் பின்புற விண்ட்ஸ்கிரீன் டிஃபோகர், மூன்று-புள்ளி சீட்பெல்ட்டுகள், என்ஜின் இம்மொபைல்ஸர் போன்றவற்றை பெற்றுள்ளது.

ரூபாய் 6.99 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் வெளியிடப்பட்டுள்ள ஸ்கோடா ரேபிட் ரைடர் காருக்கு சவாலாக மாருதியின் சியாஸ், ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா, டொயோட்டா யாரீஸ், ஃபோக்ஸ்வேகன் வென்டோ போன்ற மாடல்கள் விளங்குகின்றது.