இந்தியா வரவுள்ள ஸ்கோடா சூப்பர்ப் ஃபேஸ்லிஃப்ட் அறிமுகமானது

Skoda Superb facelift

இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள புதிய ஸ்கோடா சூப்பர்ப் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் சூப்பர்ப் பிளக் இன் ஹைபிரிட் ஆப்ஷன் விற்பனைக்கு வெளியாக உள்ளது.

ஸ்கோடாவின் சூப்பர்ப் காரின் தோற்ற அமைப்பு , இன்டீரியர் போன்றவை புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் புதிய சூப்பர்ப் கார் அடுத்த ஆண்டின் தொடக்க மாதங்களில் கிடைக்க உள்ளது.

ஸ்கோடா சூப்பர்ப் ஃபேஸ்லிஃப்ட்

முழுமையான எல்இடி மேட்ரிக்ஸ் ஹெட்லைட் கொண்ட சூப்பர்ப்-ல் புதுப்பிக்கப்பட்ட முன்பக்க் கிரில், பம்பர் அமைப்பு போன்றவற்றுடன் எல்இடி டெயில் லைட் இணைக்கப்பட்டுள்ளது. முந்தைய காரை விட 8 மிமீ நீளம் அதிகரிக்கப்பட்டு காரின் நீளம்  4,869 மிமீ ஆக உயர்ந்துள்ளது. டிரைவர் அசிஸ்டென்ஸ், பிரீடெக்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், ட்ரையிலர் அசிஸ்ட், ஏரியா வியூ என நான்கு கேமராக்களை கொண்டு 360 டிகிரி பாகையில் காரை காணும் வசதி பெற்றதாக அமைந்துள்ளது.

பிளக் இன் ஹைபிரிட் வெர்ஷன் மாடல் உட்பட மொத்தம் 6 விதமான என்ஜின் தேர்வுகளை கொண்டதாக சூப்பர்ப் சர்வதேச அளவில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. 150 BHP பவரை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் TSI என்ஜின் 6 வேக மேனுவல் அல்லது 7 வேக ஆட்டோ கியர்பாக்ஸ் உடன் வந்துள்ளது.

150 BHP பவரை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் TSI என்ஜின் பெற்ற மாடல் டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் உடன் வந்துள்ளது. மேலும் மற்றொரு 272 BHP பவரை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் TSI என்ஜின் பெற்ற மாடல் டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் உடன் வந்துள்ளது.

டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் உடன் வந்துள்ள 1.6 லிட்டர் TDI என்ஜின் ஆனது 120 BHP பவரை வெளிப்படுத்தும். அடுத்தப்படியாக 2.0 லிட்டர் TDI Evo என்ஜின் 150 BHP மற்றும் 190 BHP என இருவிதமான பவரை வெளிப்படுத்துகின்றது.

பிளக் இன் ஹைபிரிட் மாடல் வோக்ஸ்வேகன் பஸாத் GTE காரில் உள்ளதை போன்ற அமைப்பினை  156 BHP பவரை வெளிப்படுத்தும் 1.4 லிட்டர் Tsi என்ஜின் உடன் எலெக்ட்ரிக் மோட்டார் 115 BHP வழங்குகின்றது. மேலும் இதில் வழங்கப்பட்டுள்ள 13 kWh பேட்டரி பேக் முழுமையாக 55 கிமீ பயணத்தை வெளிப்படுத்துகின்றது. 6 வேக டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

வரும் செப்டம்பர் மாதம் முதல் ஸ்கோடா சூப்பர்ப் விற்பனைக்கு கிடைக்க உள்ளது. இந்திய சந்தையில் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் விற்பனைக்கு வெளியாக உள்ளது.

Exit mobile version