Home Car News

சாங்யாங் ரெக்ஸ்டான் G4 ஃபேஸ்லிஃப்ட் அறிமுகமானது

SsangYong Rexton G4

தென்கொரியாவில் புதிய சாங்யாங் ரெக்ஸ்டான் G4 ஃபேஸ்லிஃப்ட் காரினை அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் இந்த எஸ்யூவி மாடல் மஹிந்திரா அல்டூராஸ் G4 என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. சர்வதேச அளவில் ரெக்ஸ்டான் ஜி4 பல்வேறு நாடுகளில் மேம்பட்ட மாடல் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.

புதிய சாங்யாங் ரெக்ஸ்டான் ஜி4 கிரில் அமைப்பு க்ரோம் பூச்சூடன் 3D விளைவைக் கொண்ட ஒரு பெரிய மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட முன் மற்றும் பின்புற பம்பர்கள் இரு முனைகளிலும் சில்வர் ஸ்கிட் பிளேட்டுகள் மற்றும் எல்இடி டெயில் விளக்குகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

ஃபேஸ்லிஃப்ட் ரெக்ஸ்டானில் பிளைன்ட் ஸ்பாட் மானிட்டிரிங் சிஸ்டம், லேன் மாறுதல் எச்சரிக்கை மற்றும் கீ ஃபாப் மூலம் ஹெட்லைட் டோக்லிங் போன்ற அம்சங்கள் இடம் பெற்றுள்ளது.

இன்டிரியர் அமைப்பில் புதுப்பிக்கப்பட்ட லேஅவுட் மற்றும் நிறங்களை கொண்டிருப்பதுடன், இன்ஸ்டூருமெண்ட் கிளஸ்ட்டர், இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவற்றில் எந்த மாற்றங்களும் பெறவில்லை. இந்த எஸ்யூவியின் 4850 மிமீ நீளம், 1960 மிமீ அகலம் மற்றும் 1825 மிமீ உயரம் கொண்டது. இது 2865 மிமீ வீல்பேஸ் மற்றும் 225 மிமீ கிரவுண்ட் கிளியரண்ஸ் கொண்டுள்ளது.

முந்தைய மாடலை விட 3 % வரை பவர் அதிகரிக்கப்பட்டு தற்போது 184.4 ஹெச்பி மற்றும் 421.69 என்எம் டார்க்கை வழங்கும் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. பவர்டிரெய்ன் 7 ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸ் பெற்று கூடுதலாக  4WD விருப்பத்தையும் வழங்குகிறது.

தென்கொரியாவில் ரெக்ஸ்டான் ஜி4 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் விலை KRW 3,43,90,000 (தோராயமாக ரூ. 20.55 லட்சம்) முதல் KRW 41,410,000 ( தோராயமாக ரூ. 24.74 லட்சம்) ஆகும். இந்தியாவில் அடுத்த ஆண்டின் தொடக்க மாதங்களில் புதிய அல்டூராஸ் ஜி4 விற்பனைக்கு வரக்கூடும்.

Exit mobile version