Site icon Automobile Tamil

யூரோ NCAP விபத்து சோதனை மதிப்பீட்டில், 3-ஸ்டார் யூரோ ரேட்டிங்கை பெற்றது 2018 சுசூகி ஜிம்னி

சுசூகி நிறுவனத்தின் புதிய தலைமுறை தயாரிப்பான சுசூகி ஜிம்மி கார்கள், தனது தனித்துவமிக்க டிசைன் மற்றும் கடினாமான சாலைகளில் பயணிக்கும் திறன் மூலம், ஆட்டோமொபைல் துறையினை கவனத்தை கவர்ந்துள்ளது. இந்த ஜிம்மி கார்கள் எப்போது இந்தியாவில் அறிமுகமாகும் என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்ற போதும், இந்த லைப்ஸ்டைல் எஸ்யூவிகளுக்கான எதிர்பார்ப்பு இந்தியாவில் அதிகரித்து கொண்டே வருகிறது.

தற்போது யூரோ NCAP விபத்து சோதனை மதிப்பீட்டில், பங்கேற்ற 2018 சுசூகி ஜிம்னி நிறுவனம் 3-ஸ்டார் யூரோ ரேட்டிங்கை பெற்றது

இது சிறந்த பாதுகாப்பு ரேட்டிங் இல்லை என்று கருதும் ஜிம்மி, சர்வதேச பாதுகாப்பு முறைகளை மேற்கொண்டது. இதில், வயது வந்தவர்கள் பயணம் செய்யும் போது அவர்களுக்கான பாதுகாப்பில் 73 சதவிகிதம், குழந்தைகள் பயணம் செய்யும் போது அவர்களுக்கான பாதுகாப்பில் 84 சதவிகிதம் மற்றும் சாலையில் பயணம் செய்பவர்களின் பாதுகாப்பில் 50 சதவிகித மதிப்பீட்டையும் பெற்றுள்ளது.

ஐரோப்பிய மாடல் பாதுகாப்பு தொழில்நுட்பகளில், 6 ஏர்பேக்குகள், ABS, லேன் அசிஸ்ட் சிஸ்டம், ஆடோனோமோஸ் எமெர்கெனசி பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் ISOFIX சீட்கள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.

யூரோ NCAP சொதனியில், டிரைவர் சைட் ஏர்பேக் சரியான பொருத்தப்படாமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் வாகனத்தை ஓட்டுபவர்களுக்கு தலையில் பெரியளவிலான காயத்தை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஐரோப்பாவில் இந்த ஜிம்மி கார்கள், 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின்களுடன், 4WD மற்றும் மெனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்சன்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கார்களில் டீசல் ஆப்சன்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்திய வெர்சன்களிலும் பெட்ரோல் கார்களே அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version