டாடா அல்ட்ரோஸ் ஆட்டோமேட்டிக் விற்பனைக்கு வந்தது

0

Tata Altroz DCA

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற அல்ட்ரோஸ் காரில் DCT எனப்படுகின்ற டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்ட மாடல் விற்பனைக்கு ரூ.8.10 லட்சம் முதல் ரூ.9.90 லட்சம் வரை கொண்டு வரப்பட்டுள்ளது.

டாடாவின் Altroz DCA (Dual Clutch Automatic) என அழைக்கப்படுகிறது. ஏனெனில் இது டூயல் கிளட்ச் தொழில்நுட்பத்துடன் இரட்டை கிளட்ச் கியர்பாக்ஸைப் பயன்படுத்தும். கூடுதலாக, அல்ட்ரோஸ் DCA ஆனது XT, XZ மற்றும் XZ+ வகைகளில் தனியான டார்க் எடிஷன் வரிசையுடன் விற்பனை செய்யப்படும் என்பதையும் டாடா உறுதிப்படுத்தியுள்ளது. புதிய நீள நிறத்துடன், சிவப்பு, சாம்பல், வெள்ளை மற்றும் மற்றொரு நீல நிறத்தில் கிடைக்கும். அல்ட்ரோஸ் DCA ஆனது 86hp, 1.2-லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் மட்டுமே வந்துள்ளது.

அல்ட்ராஸ் காரில் லெதேரேட் இருக்கைகள், ஹர்மனின் 7-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், பின்புற ஏசி வென்ட்கள், க்ரூஸ் கன்ட்ரோல், ஆட்டோ ஹெட்லேம்ப்கள், iRA கணெக்டேட் கார் தொழில்நுட்பம் போன்ற பல பிரீமியம் அம்சங்களுடன் வருகிறது. மேலும், ஆட்டோ கியர்பாக்ஸ் பெற்ற போட்டியாளர்களான மாருதி சுஸுகி பலேனோ AMT, ஹூண்டாய் i20 1.0 DCT, ஃபோக்ஸ்வேகன் போலோ 1.0 TSI தானியங்கி மற்றும் ஹோண்டா ஜாஸ் CVT ஆகியவற்றை எதிர் கொள்கின்றது.

Tata Altroz auto price list

Variant Price
XM+ DCA Rs. 8,09,900/-
XT DCA Rs. 8,59,900/-
XT Dark DCA Rs. 9,05,900/-
XZ DCA Rs. 9,09,900/-
XZ(O) DCA Rs. 9,21,900/-
XZ+ DCA Rs. 9,59,900/-
XZ+ Dark DCA Rs. 9,89,900/-

Prices are ex-showroom, Delhi