Automobile Tamil

டாடா அல்ட்ரோஸ் காரின் சிறப்புகளுடன் புகைப்பட தொகுப்பு

டாடா அல்ட்ராஸ்

டாடா மோட்டார்சின் இம்பேக்ட் 2.0 டிசைன் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட அல்ட்ரோஸ் காரில் பிஎஸ்6 பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷனுடன் மிக சிறப்பான அல்ஃபா பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்ட முதல் மாடலாக விளங்குகின்றது.

மிக நேர்த்தியான கிரில் அமைப்புடன் இறுதியாக இணைக்கப்பட்ட புராஜெக்டர் முன் விளக்குகள் மற்றும் எல்இடி ரன்னிங் விளக்குடன் இணைந்த பனி விளக்குகள் வழங்கப்பட்டுள்ளது.

பக்கவாட்டில் இற நிற கலவையில் 16 அங்குல டைமன்ட் கட் அலாய் வீல் வங்கப்பட்டு மிக நேர்த்தியாக 90 டிகிரி கோணத்தில் திறக்கும் வகையிலான கதவுகளை பெற்றுள்ளது. அதே நேரத்தில் பக்கவாட்டில் உள்ள கதவு கைப்பிடிகளில் முன்புறம் வழக்கம் போல அமைந்திருந்தாலும், பின்புற கதவு கைப்பிடி சி பில்லரில் கருப்பு இன்ஷர்ட்களுடன் நேர்த்தியாக இணைக்கப்பட்டுள்ளது.

பின்புறத்தில் வழங்கப்பட்டுள்ள கருமை நிறம் காருக்கு கூடுதல் கவர்ச்சியை ஏற்படுத்துவதுடன் நேர்த்தியான எல்இடி டெயில் விளக்குகள் வழங்கப்பட்டு அதன் இடையில் பின்புற கதவு கைப்பிடி உள்ளது.

டாடாவின் அல்ட்ராஸ் காரின் இன்டிரியர் கருப்பு மற்றும் கிரே என இரு நிற கலவையில் மிகவும் பீரிமியர் தோற்ற அமைப்பினை வழங்கும் வகையிலும் கூடுதலாக டேஸ்போர்டில் சில்வர் இன்ஷர்ட்கள் ஸ்டீயரிங் வீலில் அமைந்துள்ளது. ஃபீரி ஸ்டாண்டிங் எனப்படுகின்ற நிற்கின்ற வகையிலான 7.0 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.

பல்வேறு நவீன அம்சங்களை கொண்டுள்ள இந்த காரின் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதிகளுடன் 12 அங்குல டிஜிட்டல் கிளஸ்ட்டர் போன்றவை உள்ளது.

தானியங்கி காலநிலை கட்டுப்பாடு, என்ஜின் புஷ் பொத்தான் ஸ்டார்ட் / ஸ்டாப், ஸ்மார்ட் கீ, எலெக்ட்ரிக் முறையில் மடிக்கக்கூடிய ORVM, முன் மற்றும் பின்புறத்தில் வேகமாக சார்ஜ் செய்யும் போர்ட், பின்புற ஏசி வென்ட்கள், க்ரூஸ் கன்ட்ரோல், மழை உணர்திறன் வைப்பர், 90 டிகிரி திறக்கும் கதவுகள், ஆட்டோ ஹெட்லேம்ப்கள், பின்புற இருக்கை ஆர்ம்ரெஸ்ட், ஃபாலோ மீ ஹெட்லேம்ப், 15 லிட்டர் குளிரூட்டப்பட்ட க்ளோவ் பாக்ஸ் வசதிகள் உள்ளது.

பாதுகாப்பு சார்ந்த அம்சங்களை பொறுத்தவரை டாடா அல்ட்ராஸ் காரில் உள்ள அனைத்து வேரியண்டுகளிலும் ஏபிஎஸ் மற்றும் இபிடி, ரியர் பார்க்கிங் சென்சார் உடன் கேமரா, வேக எச்சரிக்கை உடன் வருகிறது. இதன் முன் சக்கரங்களில் டிஸ்க் பிரேக்குகள் மற்றும் பின்புற டயரில் டிரம் பிரேக்குகளுடன் பொருத்தப்பட்டுள்ளது. அல்ட்ரோஸ் காரின் அனைத்து வேரியண்டிலும் இரட்டை முன் ஏர்பேக்குகள் மட்டுமே பெறுகிறது.

1.5 லிட்டர், 4 சிலிண்டர், பிஎஸ் 6 டீசல் என்ஜின் மூலம் இயக்கப்படுகின்ற அல்ட்ரோஸில் 4000 ஆர்.பி.எம்-மில் 90 பிஎஸ் பவர், 1250-3000 ஆர்.பி.எம்-மில் 200 என்எம் டார்க்கையும் வங்குகின்றது. இந்த என்ஜின் 5 ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது.

பிஎஸ் 6 பெட்ரோல் என்ஜின் 1.2 லிட்டர், 3-சிலிண்டர் அதிகபட்சமாக 6000 ஆர்.பி.எம்-மில் 86 பிஎஸ் பவர் மற்றும் 3300 ஆர்.பி.எம்-மில் 113 என்எம். இந்த என்ஜின் 5-ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது.

அல்ட்ரோஸ் காருக்கு நேரடி போட்டியை மாருதி பலேனோ, டொயோட்டா கிளான்ஸா, ஹூண்டாய் ஐ20 மற்றும் ஹோண்டா ஜாஸ் போன்ற மாடல்கள் ஏற்படுத்த உள்ளது.

கோல்டு, சில்வர், சிவப்பு மற்றும் வெள்ளை என மொத்தமாக 5 விதமான நிறங்களை பெற்றதாக விற்பனைக்கு கிடைக்க உள்ளது.

அல்ட்ரோஸில் XE,XM,XT மற்றும் XZ என நான்கு வேரியண்டுகள் கிடைக்க உள்ளது. இவற்றில் ஒவ்வொரு வேரியண்டுகளுக்கும் கஸ்டமைஸ் ஆப்ஷ்னாக ரிதம், ஸ்டைல் மற்றும் அர்பன் என வழங்கப்படுகின்றது. குறிப்பாக டாப் XZ (O) வேரியண்டில் மட்டும் கருப்பு நிற மேற்கூறை வழங்கப்பட்டுள்ளது.

 அல்ட்ராஸ் காரின் விலை ரூ.5 முதல் ரூ.8 லட்சத்தில் அமைய வாய்ப்புகள் உள்ளது. ரூ.21,000 செலுத்தி முன்பதிவு செய்துக் கொள்ளலாம். ஜனவரி 2020-ல் விலை அறிவிக்கப்பட உள்ளது.

Exit mobile version