ரூ.40,000 வரை அல்ட்ரோஸ் டீசல் காரின் விலையை குறைத்த டாடா மோட்டார்ஸ்

0

altroz rear

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற அல்ட்ரோஸ் காரின் டீசல் வேரியண்டின் விலையை ரூ.40,000 வரை குறைத்துள்ளது. ஆனால் ஆரம்ப நிலை XE வேரியண்ட் தொடர்ந்து ரூ.6.99 லட்சத்தில் துவங்குகின்றது.

Google News

அல்ட்ரோஸ் XM, XT, XZ மற்றும் XZ(O) வேரியண்ட் வரிசை மட்டுமே விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில், பேஸ் வேரியண்ட் XE மற்றும் XE ரிதம் மாடல்கள் விலையில் எந்த மாற்றமும் இல்லை. அதேபோல XZ வேரியண்ட் விலை ரூ.22,000 மட்டும் குறைந்துள்ளது. பெட்ரோல் மாடல் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

1.5 லிட்டர், 4 சிலிண்டர், பிஎஸ் 6 டீசல் என்ஜின் மூலம் இயக்கப்படுகின்ற அல்ட்ரோஸில் 4000 ஆர்.பி.எம்-மில் 90 பிஎஸ் பவர், 1250-3000 ஆர்.பி.எம்-மில் 200 என்எம் டார்க்கையும் வங்குகின்றது. இந்த என்ஜின் 5 ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது.

டாடா அல்ட்ரோஸ் டீசல் விலை பட்டியல்

XE 1.5 D – ரூ. 6,99,000

XE 1.5 D RHYTM – ரூ. 7,27,000

XM 1.5 D – ரூ. 7,50,000

XM 1.5 D STYLE – ரூ. 7,84,000

XM 1.5 D RHYTM – ரூ. 7,89,000

XM 1.5 D RHYTM+STYLE – ரூ. 8,14,000

XT 1.5 D – ரூ. 8,19,000

XT 1.5 D LUXE – ரூ. 8,58,000

XZ 1.5 D – ரூ. 8,79,000

XZ(O) 1.5 D – ரூ. 8,95,000

XZ 1.5 D URBAN – ரூ. 9,09,000

(விற்பனையக விலை டெல்லி)