45x காரின் பெயர் டாடா அல்ட்ரோஸ் என அறிவிக்கப்பட்டது

டாடா மோட்டார்சின் அல்ட்ரோஸ் (Tata Altroz) ஹேட்ச்பேக் கார் ஜெனிவா மோட்டார் ஷோ அரங்கில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. முன்பாக 45x கான்செப்ட் என்ற பெயரில் டாடா அல்ட்ரோஸ் கார் அழைக்கப்பட்டு வந்தது.

இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற மாருதி பலேனோ, ஹூண்டாய் ஐ20 மற்றும் ஹோண்டா ஜாஸ் உள்ளிட்ட பிரிமியம் ஹேட்ச்பேக் மாடல்களுக்கு மிகவும் சவாலான டாடாவின் நேர்த்தியான டிசைன் அம்சத்தை பெற்றதாக அல்ட்ரோஸ் கார் விளங்க உள்ளது.

டாடா அல்ட்ரோஸ் காரின் சிறப்புகள் என்ன..

டாடா டியோகோ, டாடா ஹேரியர் போன்று நவீனத்துவமான வடிவமைப்பை பெற்று விளங்க உள்ள புதிய ஹேட்ச்பேக் ரக அல்ட்ரோஸில் மிகவும் அகலமான இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்டூர்மென்ட் கிளஸ்ட்டர், உட்பட நவீன ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே வசதிகளுடன் மிகவும் தாரளமான இடவசதியை வெளிப்படுத்தும் கேபின் பெற்று பல்வேறு பிரிமியம் அம்சங்களை கொண்டிருக்கும்.

ஹேரியர் போன்ற மிகவும் ஸ்டைலிஷான கோடுகள் மற்றும் முகப்பு கிரில் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருக்கும். இந்த மாடலில் இரு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் என்ஜின் ஆப்ஷன் இடம்பெற்றிருக்க வாய்ப்புள்ளது.

டாடா அல்ட்ரோஸ் காரின் அறிமுகம் 2019 ஜெனிவா மோட்டார் ஷோ அரங்கில் மார்ச் 5ந் தேதி வெளியிடப்பட உள்ளது. மேலும் இந்த காரின் பெயருக்கான காரணம் கடலில் வாழ்கின்ற அல்பட்ரோஸ் (albatross ) என்ற பெயரிலியிருந்து உருவாக்கப்பட்டு அல்ட்ரோஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version