அல்ட்ராஸ் டர்போ பெட்ரோல் டீசரை வெளியிட்ட டாடா மோட்டார்ஸ்

0

tata altroz turbo petrol teased

வரும் ஜனவரி 13 ஆம் தேதி விற்பனைக்கு வெளியாக உள்ள புதிய டர்போ பெட்ரோல் இன்ஜின் பெற்ற டாடா அல்ட்ராஸ் காருக்கான முதல் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. விற்பனையில் உள்ள மாடலை விட கூடுதலான பவரை வெளிப்படுத்தக்கூடிய காராக விளங்க உள்ளது.

Google News

டாடா மோட்டார்சின் நெக்ஸான் எஸ்யூவி காரில் பயன்படுத்தப்பட்டு வருகின்ற 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் அடிப்படையிலான இன்ஜினை பெற உள்ள அல்ட்ராஸ் காரில் பவர் சற்று குறைக்கப்பட்டிருக்கலாம். எனவே, 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 3 சிலிண்டர் அதிகபட்சமாக 5500 ஆர்.பி.எம்-மில் 108 பிஎஸ் பவர் மற்றும் 1500-5000 ஆர்.பி.எம்-மில் 140 என்எம் வெளிப்படுத்தும். இந்த டர்போ பெட்ரோல் என்ஜின் முதற்கட்டமாக 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது.  ஆனால் இதில் டிசிடி ஆட்டோ வேரியண்ட் கால தாமதமாக விற்பனைக்கு கிடைக்க உள்ளது.

முன்பே இணையத்தில் கசிந்த சில தகவல்களின் அடிப்படையில் விலை கசிந்திருக்கின்றது அதன்படி, அல்ட்ராஸ் டர்போ மாடல் ரூ.7.99 லட்சத்தில் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த காருக்கு நேரடியான போட்டியை  ஃபோக்ஸ்வாகன் போலோ 1.0 TSI மற்றும் ஹூண்டாய் ஐ20 டர்போ மாடலை எதிர்கொள்ளும்.

இந்த காரின் விலை ஜனவரி 13 அறிவிக்கப்பட உள்ளதால் முன்பதிவு அடுத்த சில நாட்களில் துவங்கலாம்.