Site icon Automobile Tamilan

வரும் டிசம்பரில் நடக்கிறது டாட்டா ஹாரியர் சர்வதேச அறிமுகம்

டாட்டா மோட்டார் நிறுவனம் தனது புதிய ஹாரியர் கார்களை 2018 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைத்தது. இந்த கார்க்கின் சர்வதேச அளவிலான அறிமுகம் வரும் டிசம்பர் மாதத்தின் முற்பகுதியில் இருக்கலம் என்று தெரிய வந்துள்ளது. இந்த கார்களுக்கான ப்ரீ புக்கிங் ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டது. ரூ.30,000 ரூபாய் செலுத்தி புதிய ஹாரியர் எஸ்யூவி காரை புக்கிங் செய்து கொள்ளலாம் என்றும், இந்த கார்களுக்கான டெலிவரி வரும் 2019ம் ஆண்டின் இரண்டாம் அரையாண்டில் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காரின் விலை 14 முதல் 18 லட்ச ரூபாயாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. (எக்ஸ் ஷோ ரூம் விலை)

டாட்டா மோட்டார் நிறுவனம் இந்த கார்களை சோதனை செய்த வீடியோக்கள் சமீபத்தில் வெளியானது. மேலும் இந்த கார்கள் இந்தூருக்கு அருகே உள்ள NATRAX டெஸ்ட் டிராக்கிலும் சோதனை செய்யப்பட்டது.

டாட்டா ஹாரியர் எஸ்யூவி-க்குள் டாட்டா இம்பேக்ட் டிசைன் 2.0 கொண்டதாக இருக்கும். துவக்கத்தில், எஸ்யூவி-கள் ஐந்து சீட் கொண்ட டிசைனில் உருவாக்கப்பட்டுள்ளதால், ஹூண்டாய் கிரட்டா, ஜீப் காம்பஸ் மற்றும் வரவிருக்கும் நிசான் கிக்ஸ் கார்களுக்கு போட்டியாக இருக்கும்.

OMEGA ஆர்க்கிடெக்சரரை அடிப்படையாக கொண்டு, லேண்ட் ரோவர் கார்களுக்கான பாரம்பரியமிக்க D8 பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த காரின் உட்புறத்தில் பிரிமியம் பொருட்களுடன் பல்வேறு வசதிகளை கொண்டிருக்கும். மேலும் இதில் 7 இன்ச் டச் ஸ்கிரீன் இன்போடேய்ன்மென்ட் சிஸ்டம், ஸ்டீயரிங் மவுண்டேட் கண்ட்ரோல், புஸ் ஸ்டார்ட்/ஸ்டாப் போன்றவை பொருத்தப்பட்டுள்ளது.

மெக்கானிக்கல் ரீதியாக பார்த்தல், இந்த கார்கள் 2.0 லிட்டர் KRYOTEC டீசல் இன்ஜின்களுடன் 140bhp ஆற்றலுடன் இயங்கும். இந்த இன்ஜின்கள் 6-ஸ்பீட் மெனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டதாக இருக்கும்.

Exit mobile version