Site icon Automobile Tamilan

Tata Harrier எஸ்யூவி அறிமுக தேதி விபரம் வெளியானது

மிகவும் எதிர்பார்த்த டாடா ஹேரியர் எஸ்யூவி ஜனவரி 23, 2019 முதல் விற்பனைக்கு வருகின்றது. ஹேரியரில் 140 hp பவரை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் இன்ஜீனியம் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

டாடா மோட்டார் மற்றும் லேண்ட்ரோவர் கூட்டணியில் உருவாக்கப்பட்டுள்ள ஹேரியர் எஸ்யூவி மாடல் மிக நேர்த்தியான டிசைன் வடிவமைப்புடன் , அசத்தலான பிரீமியம் எஸ்யூவி மாடலாகவும் விளங்குகின்றது.

மிக நேர்த்தியான வளைந்த வடிவத்தை பெற்ற ஹேரியர், பகல் நேர ரன்னிங் விளக்குடன் கூடிய இன்டிகேட்டர், ஸெனான் HID புராஜெக்டர் விளக்குகள், மிதிக்கும் வகையிலான கூறை, க்ரோம் பூச்சூ போன்றவற்றுடன் எல்இடி டெயில் விளக்கை பெற்றுள்ள இந்த எஸ்யூவி மாடல் 4,598mm நீளத்தை பெற்ற இந்த எஸ்யூவி மாடலின் அகலம் 1,894mm , 1,706mm உயரம் மற்றும் 2,741mm வீல்பேஸ் கொண்ட இந்த மாடல் தாரளமான இடவசதியை கொண்டிருக்கின்றது.

தற்போதைக்கு 5 இருக்கை (2020ல் 7 இருக்கை மாடல் வெளிவரும்) கொண்ட மாடலாக வந்துள்ள டாடா ஹேரியர் காரில் மிகவும் தாரளமான இடவசதியுடன், பிரீமியம் தோற்றத்தை வெளிப்படுத்தும் இருக்கை , அப்ஹோல்ஸ்ட்ரி, நேர்த்தியான டேஸ்போர்டில் 8.8 அங்குல இன்ஃஓடெயின்மென்ட் சிஸ்டம் பெற்றுள்ளது. பாதுகாப்பு சார்ந்த அம்சங்களாக 6 ஏர்பேக், ஏபிஎஸ் இபிடி ஆகியவற்றை பெற்று விளங்குகின்றது.

140 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் ஃபியட் டர்போ டீசல் என்ஜின் அதிகபட்சமாக 350 என்எம் டார்க் வழங்குகின்றது. இதில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. அடுத்த சில மாதங்களில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இடம்பெற உள்ளது.  லேண்ட் ரோவர் மாடல்களில் இடம்பெற்றுள்ள டெரெயின் ரெஸ்பான்ஸ் கன்ட்ரோலர் மல்டி மோட் (நார்மல், வெட், மற்றும் ரஃப்) மற்றும் டாடா மல்டி டிரைவ் (ஈக்கோ, சிட்டி மற்றும் ஸ்போர்ட்) போன்றவற்றை பெற்றுள்ளது.

XE, XM, XT மற்றும் XZ என நான்கு வேரியன்ட்டுகளில் ஹேரியர் வரவுள்ள நிலையில் ஆன்ரோடு விலை ரூ. 16 லட்சம் முதல் தொடங்கி ரூ.20 லட்சம் வரை அமைந்திருக்கலாம். ஹூண்டாய் க்ரெட்டா, ஜீப் காம்பஸ், ரெனோ கேப்டூர், வரவுள்ள நிசான் கிக்ஸ், மற்றும் எக்ஸ்யூவி500 ஆகிய மாடல்களை எதிர்க்கும் திறனுடன் டாடா ஹேரியர் எஸ்யூவி விளங்கும்.

Exit mobile version