Site icon Automobile Tamilan

புதிய டாடா ஹார்ன்பில் எஸ்யூவி கான்செப்ட் வெளியாகிறது

வருகின்ற மார்ச் மாதம் நடைபெற உள்ள ஜெனிவா மோட்டார் ஷோ அரங்கில் , டாடா அக்யூல்லா (45X) கான்செப்ட் அடிப்பையிலான மைக்ரோ எஸ்யூவி மாடலாக டாடா ஹார்ன்பில் கான்செப்ட் (X445) முதன்முறையாக அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

விற்பனையில் உள்ள மஹிந்திரா KUV100 எஸ்யூவி காருக்கு எதிராக களமிறங்க உள்ள ஹார்ன்பில் எஸ்யூவி , வரவுள்ள மாருதி Future S கான்செப்ட், டட்சன் மினி எஸ்யூவி மற்றும் ஹூண்டாய் மினி எஸ்யூவி ஆகிய மாடல்களுக்கு போட்டியாக அமைய உள்ளது. இந்த எஸ்யூவி மாடல் மிக நேர்த்தியான டாடா இம்பேக்ட் டிசைன் 2.0 அடிப்படையில் அமைந்திருக்கும்.

டாடா நிறுவனத்தின் அட்வான்ஸடு Alfa modular platform (Alpha ARC) வடிவமைக்கப்பட்ட மாடலாக வெளியாக உள்ள ஹார்ன்பில் மைக்ரோ எஸ்யூவி காரில், டியாகோ மாடலில் இடம்பெற்றிருக்கின்ற 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் மற்றும் 1.05 லிட்டர் ரெவோடார்க் டீசல் என்ஜின் பாரத் ஸ்டேஜ் 6 மாசு விதிகளை பெற்றிருக்கும் என கூறப்படுகின்றது. விரைவில் வெளியாக உள்ள டாடா ஹேரியர் எஸ்யூவி மாடல் மற்றும் வரவுள்ள பிரிமியம் ஹேட்ச்பேக் ரக மாடலான டாடா அக்யூல்லா (45X) ஆகியவை புதிய டாடா இம்பேக்ட் டிசைன் 2.0 அடிப்படையில் மிக நேர்த்தியான கட்டமைப்பினை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது.

ஹாரன்பில் மிக நேர்த்தியான வடிவமைப்பினை பெற்றிருக்கும் என்பதனால் இளைய தலைமுறையினரை வெகுவாக கவரும் வகையில் அமைந்திருக்கும். டேஸ்போர்டில் அமைப்பில் பல்வேறு நவீன அம்சங்களை உள்ளடக்கியதாக அமைந்திருக்கும்.

ஆட்டோ கார் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியில் முதன்முறையாக கான்செப்ட் டிசைன் மார்ச் மாதம் நடைபெற உள்ள ஜெனிவா மோட்டார் ஷோ அரங்கில் டாடா வெளிப்படுத்த உள்ள புதிய மாடல்களில் ஒன்றாக ஹார்ன்பில் காட்சிப்படுத்தப்பட உள்ளது. உற்பத்தி நிலை மாடல் 2020 ஆம் ஆண்டில் நடைபெற உள்ள ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் வெளியாகலாம். அதனை தொடர்ந்து அடுத்த சில மாதங்களில் விற்பனைக்கு கிடைக்கலாம்.

Exit mobile version