டாடா நெக்ஸான் ஏஎம்டி எஸ்யூவி விபரங்கள் வெளியானது

0

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின், பிரசத்தி பெற்ற நெக்ஸான் எஸ்யூவி அடிப்படையிலான டாடா நெக்ஸான் ஏஎம்டி பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களின் நுட்ப விபரங்களை டாடா மோட்டார்ஸ் வெளியிட்டுள்ளது. ஆனால் அறிமுக தேதி குறித்து எந்த தகவலும் இல்லை.

டாடா நெக்ஸான் ஏஎம்டி

விற்பனையில் உள்ள டாடா நெக்ஸான் எஸ்யூவி தோற்ற அமைப்பில் எவ்விதமான மாற்றங்களும் பெறாமல் கூடுதலாக ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸை மட்டும் பெற வரவுள்ள நெக்ஸான் ஏஎம்டி முதன்முறையாக 2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து தற்போது விபரங்கள் வெளியாகியுள்ளது.

ரெவோட்ரான் பெட்ரோல் எஞ்சின் கூடுதல் பவர் மற்றும் டார்க் பெற்ற எஸ்யூவிக்கு ஏற்ற வகையில் 1.2 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 108bhp பவருடன் 170Nm டார்க்கினை வழங்குகின்றது. தற்போது புதிதாக 6 வேக ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. இந்த மாடலில் மல்டி டிரைவிங் மோட் வழங்கப்பட்டுள்ளது. அதாவது ஆட்டோ மோடில் ஈகோ, சிட்டி மற்றும் ஸ்போர்ட் (மேனுவல் சமயங்களில் டிரிப்டரானிக்) ஆகியவற்றை கொண்டுள்ளது.

மேலும் ரெவோடார்க் வரிசையில் இடம்பெற்றுள்ள 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 108 bhp பவருடன் 260 Nm டார்க்கினை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு எஞ்சினிலும் 6 வேக TA6300 சிங்க்ரோமெஸ் மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கின்றது. தற்போது புதிதாக 6 வேக ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. இந்த மாடலில் மல்டி டிரைவிங் மோட் வழங்கப்பட்டுள்ளது. அதாவது ஆட்டோ மோடில் ஈகோ, சிட்டி மற்றும் ஸ்போர்ட் ( டிரிப்டரானிக்) ஆகியவற்றை கொண்டுள்ளது.

மேலும் இந்த காரில் இடம்பெற்றுள்ள ஆன்டி ஸ்டால், கிக்-ஆஃப் மற்றும் ஃபாஸ்ட் ஆஃப் ஆகிய நுட்பங்களை பெற்றுள்ளது. ஆன்டி ஸ்டால் எனப்படுவது திடீரென பிரேக்கிங் செய்யும் சமயங்களில் ஆக்சிலேரட்டரை குறைத்து டார்க் போன்றவற்றை கட்டுக்குள் கொண்டு வரும், கிக் ஆஃப் எனும் நுட்பம் திராட்டில் வேகத்தை கணக்கிட்டு டார்க்கினை அதிகரிக்க உதவும் மற்றும் ஃபாஸ்ட் ஆஃப் எனப்படுவது வேகத்தை அதிகரிக்க உதவும் நுட்பமாகும். அடுத்த சில வாரங்களில் டாடா நெக்சான் ஏஎம்டி விற்பனைக்கு வெளியாக உள்ளது.