தற்போது ஆப்பிள் கார்பிளே-உடன் வெளி வருகிறது டாட்டா நெக்சன்

0

உயர்தரம் கொண்ட எஸ்யூவிகளை வெற்றி கரமாக அறிமுகம் செய்து வரும் டாட்டா மோட்டர்ஸ் நிறுவனம், தற்போது நெகசன் கார்களை அறிமுகம் செய்துள்ளது. சமீபத்தில் இந்த கார்களுக்கு நடத்தப்பட்ட NCAP கிராஷ் டெஸ்ட்டில் 4 ஸ்டார் ரேட்டிங் பெற்றது. டாட்டா மோட்டர்ஸ் நிறுவனம் தற்போது இந்த கார்களில் ஆப்பிள் கார்பிளே-வை இணைத்துள்ளது. ஏற்கனவே இந்த காரை வாங்கி உள்ளவர்கள், அருகில் உள்ள அதிகாரப்பூர்வ டாட்டா டீலர்களிடம் சென்று, தங்கள் கார்களில் சாப்ட்வேர் அப்டேட் செய்து கொள்ளலாம். இந்த சாப்ட்வேர் அப்டேட், 6.5 இன்ச் டச்ஸ்கிரினில் செய்யப்படும். இந்த அப்டேட்-ஐ இன்ஸ்டால் செய்ய மூன்று நிமிடங்கள் மட்டுமே ஆகும்.

நெக்சன் கார்களில் கடந்த ஏப்ரல் மாதத்தில், சாப்ட்வேர் மற்றும் ஹார்டுவேர்களில் அப்டேட் செய்யப்பட்டது. இந்த அப்டேட்டின் ஒரு பகுதியாக, ஹெட்லேபில் சிலிகான் பேட்கள் பொருத்தப்பட்டது. இதன் மூலம் காரில் இடம் பெற்றுள்ள வயர்கள், பிராக்ஜ்க்ட்டர் யூனிட்டை தொடாதவாறு செய்யப்பட்டது. இதுமட்டுமின்றி கீ உள்ள இடத்தில் உள்ள பிளாஸ்டிக் பேட்டரி கவர்களை மாற்றியமைக்கப்பட்டது. XZ+ வகைகளில் இது ஸ்மார்ட் கீ யாக மாற்றப்பட்டது. மேலும், சில பிரச்சினைகளுடன் இருந்த ப்ளுடூத் கனெக்டிவிடி மற்றும் டச்ஸ்கீரின் பிரச்சினைகளும் சரிசெய்யப்பட்டது.

Google News

கடந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த கார்களின் விலை 6.15 லட்சம் முதல் 10.59 லட்சம் விலைகளுக்கு இடைப்பட்டதாக இருக்கும். (எக்ஸ்-ஷோரூம் விலை). இந்த கார்கள் பெட்ரோல் மற்றும் டீசல் வகைகளிலும் மெனுவல் மற்றும் AMT ஆப்சனில் கிடைகிறது. பெட்ரோல் வகை கார்கள், 1.2 லிட்டர் ரவொடன் இன்ஜின், 108bhp, 170Nm டார்க்யூ மற்றும் டீசல் வகை கார்கள் 1.2 லிட்டர் ரவொடன் இன்ஜின் , ஆயில் பம்பர் 108bhp 260Nm டார்க்யூ உடனும் கிடைகிறது.

பாதுகாப்பை பொறுத்தவரை, வழக்கமான டிரைவர் சைடு ஏர்பேக், பயணிகள் ஏர்பேக் மற்றும் ஆண்டிலாக்கிங் பிரேகிங் சிஸ்டம். இதுமட்டுமின்றி ISOFIX அங்கர்ரேஜ் பாதுகாப்பு வசதிகள் XZ+ மற்றும் XZA+ வகைகளில் பொருத்தப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி உலகளவிலான NCAP கிராஷ் டெஸ்டில் அடல்ட் சேப்டியில் 4ஸ்டார் ரேடிங் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பில் 3 ஸ்டார் ரேடிங் பெற்றுள்ளது.