4 ஸ்டார் ரேட்டிங்.., டாடா டியாகோ, டிகோர் கிராஷ் டெஸ்ட் முடிவுகள்

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்ஸான், அல்ட்ரோஸ் என இரு மாடல்களும் 5 நட்சத்திரத்தை பெற்றிருந்த நிலையில் புதிய டியாகோ மற்றும் டிகோர் என இரு மாடல்களும் நான்கு நட்சத்திரத்தை பெற்று அசத்தியுள்ளது.

உலகளாவிய புதிய கார் மதிப்பீட்டு திட்டம் (Global New Car Assessment Programme – Global NCAP)  சோதனைகளின் முடிவில் டாடா மோட்டார்ஸ் தொடர்ந்து சிறப்பான மதிப்பீட்டை பெற்று வருகின்றது. இந்தியாவின் 5 நட்சத்திர மதிப்பீட்டை பெற்ற காராக விளங்கும் நெக்ஸான் எஸ்யூவி மாடலை தொடர்ந்து, அல்ட்ராஸ் காரும் 5 நட்சத்திர மதிப்பீட்டை குளோபல் என்சிஏபி சோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சமீபத்தில் எக்ஸ்யூவி 300 மாடலும் கூட 5 நட்சத்திரத்தைப் பெற்றது.

சோதனைக்கு உட்படுத்தப்பட்ட டியாகோ மற்றும் டிகோரில் இரட்டை ஏர்பேக்குகள், ஏபிஎஸ் உடன் இபிடி, இருக்கை பெல்ட் ரிமைன்டர், ஸ்பீடு அலெர்ட் மற்றும் ஐஎஸ்ஓ ஃபிக்ஸ் இருக்கைகள் பெற்ற இந்த மாடலில்,  முன்புற  ஆஃப்செட் மோதல் மற்றும் பக்கவாட்டு மோதல் ஏற்படுத்தி சோதனை செய்யப்பட்டுள்ளது.

குளோபல் என்சிஏபி அறிக்கையில் டியாகோ மற்றும் டிகோர் ஓட்டுநர் மற்றும் முன் பயணிகளின் தலை, கழுத்து மற்றும் முழங்கால்களுக்கு நல்ல பாதுகாப்பையும், மார்புக்கு போதுமான பாதுகாப்பையும் அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.  இந்த மாடலின் பாடிஷெல் சற்று நிலைப்பு தன்மை குறைவாக உள்ளது.

வயதுவந்தோர் பாதுகாப்பில் அல்ட்ராஸ் மாடலுக்கு 17 புள்ளிகளில் 12.52 புள்ளிகளைப் பெற்றுள்ளது. குழந்தை சார்ந்த பாதுகாப்பு அமைப்பில் 49 புள்ளிகளுக்கு 34.17 புள்ளிகளை மட்டுமே எடுத்துள்ளது.

 

 

Exit mobile version