Automobile Tamilan

ஆப்பிள் கார் ப்ளே ஆதரவினை பெற்ற டாடா டியாகோ, டிகோர் மற்றும் ஹாரியர்

டாடா மோட்டார்ஸ் நிறுவனம், தனது பிரசத்தி பெற்ற மாடல்களான டியாகோ மற்றும் டிகோர் கார்களின் டாப் XZ+ வேரியன்ட் மாடல்களில் முன்பு ஆண்ட்ராய்டு ஆட்டோ வழங்கப்பட்ட நிலையில், தற்போது ஆப்பிள் கார் ப்ளே ஆதரவை இணைத்துள்ளது. இதன் மூலம் ஆப்பிள் ஐபோன் பயனாளர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம். இதனை டியாகோ மற்றும் டீகோர் காரின் உரிமையாளர்கள் தங்கள் அருகாமையில் உள்ள சர்வீஸ் மையங்களை அனுகும்போது இதற்கான மென்பொருள் மேம்பாட்டை வழங்குவார்கள்.

டியாகோ கார் மாடல் மிகவும் ஸ்டைலிஷான தோற்றத்துடன் சிறப்பான செயல்திறன் மிக்க என்ஜின் கொண்டு வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது. டாடா மோட்டார்சின் பிரபலமான ஹாரியர் எஸ்யூவி காரிலும் ஆப்பிள் கார் பிளே ஆதரவு தற்போது கிடைக்கின்றது.

ஆப்பிள் கார் ப்ளேவுடன் டாடா டியாகோ

69பிஹெச்பி ஆற்றலை வழங்கும் புதிய 1.05 லிட்டர் ரெவோடார்க் என்ஜின் டார்க் 140என்எம் ஆகும். சிட்டி மற்றும் இக்கோ இரண்டு விதமான டிரைவிங் ஆப்ஷன் உள்ளது. 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

டாடா போல்ட் , ஸெஸ்ட் கார்களில் பயன்படுத்தப்பட்டுள்ள அதே 1.2 லிட்டர் ரெவோட்ரான் என்ஜின் ஆற்றல் 83.8பிஹெச்பி மற்றும் டார்க் 114 என்எம் ஆகும். சிட்டி மற்றும் இக்கோ இரண்டு விதமான டிரைவிங் ஆப்ஷன் உள்ளது. 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

டியாகோ கார் மாடலானது செலிரியோ , கிராண்ட் ஐ 10 , வேகன் ஆர் ஆகியவற்றுக்கு எதிராக நிலை நிறுத்தப்பட்டுள்ளது. டாடா டிகோர் கார் மாடல் ஹூண்டாய் எக்ஸ்சென்ட், மாருதி டிசையர், ஃபோர்டு ஆஸ்பயர் போன்ற மாடல்களுக்கு சவாலாக விளங்குகின்றது.

மேலும் படிங்க – ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே பற்றி அறிக

Exit mobile version