டாடா டியாகோ விஸ் எடிசன் விற்பனைக்கு வெளியானது

0

tiago wizz

டைட்டானிய கிரே நிறத்தில் 10 புதிய வசதிகள் மற்றும் மாற்றங்களை கொண்டு டாடா டியாகோ விஸ் எடிசன் ரூபாய் 5 லட்சத்து 40 ஆயிரம் விலையில் வெளியிடப்பட்டுள்ளது. 2.50 லட்சம் டியாகோ கார்கள் விற்பனை எண்ணிக்கையை கடந்துள்ள நிலையில் இந்த சிறப்பு எடிஷன் பண்டிகை காலத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் கிடைக்க உள்ளது.

Google News

பெட்ரோல் வெர்ஷனில் மட்டும் கிடைக்க உள்ள இந்த சிறப்பு எடிஷனில் 1.2 லிட்டர் ரெவோட்ரான் என்ஜின் ஆற்றல் 83hp மற்றும் டார்க் 114Nm ஆகும். சிட்டி மற்றும் இக்கோ இரண்டு விதமான டிரைவிங் ஆப்ஷன் உள்ளது. 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

சமீபத்தில் இந்நிறுவனம் ,தனது டியாகோ மற்றும் டீகோர் கார்களின் டாப் XZ+ மற்றும் XZA+ வேரியண்டுகளில் முழுமையான டிஜிட்டல் கிளஸ்ட்டரை கொண்டு வந்திருந்தது. தற்பொழுது வந்துள்ள ஸ்பெஷல் விஸ் எடிசனில் டியாகோ ஹேட்ச்பேக்கிற்கு டைட்டானியம் கிரே நிறம், மாறுபட்ட பளபளப்பை பெற்ற கருப்பு ரூஃப், முன் கிரில், ORVM  மற்றும் ‘ஹைப்பர்ஸ்டைல்’ சக்கரங்களில் ஆரஞ்சு நிறம் வழங்கப்பட்டு கூடுதலாக குரோம் பூச்சில் ‘விஸ்’ பேட்ஜிங் கொண்டுள்ளது. இதேபோல், உட்புறத்தில் ஏசி வென்ட்களைச் சுற்றி ஆரஞ்சு நிறம், இருக்கைகளுக்கு ஆரஞ்சு நிற தையல், டைட்டானியம் கிரே நிறத்திலான கியர் லீவர் மற்றும் கிரானைட் கருப்பு நிறத்தில் உள் கதவு கைப்பிடிகள் வழங்கப்பட்டுள்ளன.

Tata Tiago Wizz Interior Tata Tiago Wizz Wheels