ஆல்டோ முதல் செல்டோஸ் வரை.., ஜூலை 2020 விற்பனையில் டாப் 10 கார்கள்

0

ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி

இந்திய ஆட்டோமொபைல் சந்தை கோவிட்-19 ஊரடங்கு தளர்வுகளுக்கு பிறகு சீரான வளர்ச்சியை பதிவு செய்து வருகின்றது. குறிப்பாக மாருதி உட்பட ஹூண்டாய் மற்றும் கியா என மூன்று நிறுவனங்களின் விற்பனை எண்ணிக்கை சீராக துவங்கியுள்ளது. இந்நிலையில் ஜூலை 2020 மாதந்திர விற்பனையில் டாப் 10 இடங்களை பிடித்த கார்கள் பற்றி அறிந்து கொள்ளலாம்.

Google News

குறிப்பாக விற்பனை எண்ணிக்கையில் ஹூண்டாய் கிரெட்டா மிக சிறப்பான வளர்ச்சி அடைந்து வருகின்றது. தற்போதைய நிலையில் 4வது இடத்தில் உள்ள இந்த மாடல் மூன்றாவது இடத்தில் உள்ள பலேனோ காரை விட வெறும் 26 எண்ணிக்கையில் மட்டும் பின் தங்கியுள்ளது.

மாருதியின் ஸ்விஃப்ட் விற்பனை எண்ணிக்கை 10,000 எண்ணிக்கையை கடந்திருந்தாலும், டிசையர் விற்பனை எண்ணிக்கை வீழ்ச்சியில் மட்டும் உள்ளது. முதல் 10 இடங்களில் மாருதி 7 இடங்களையும், ஹூண்டாய் 2 இடங்களை கைப்பற்றியுள்ளது.

வரிசை தயாரிப்பாளர்/ மாடல் ஜூலை 2020
1 மாருதி ஆல்டோ 13,654
2 மாருதி வேகன் ஆர் 13,515
3 மாருதி பலேனோ 11,575
4 ஹூண்டாய் கிரெட்டா 11,549
5 மாருதி ஸ்விஃப்ட் 10,173
6 மாருதி டிசையர் 9,046
7 மாருதி எர்டிகா 8,504
8 மாருதி ஈக்கோ 8,501
9 ஹூண்டாய் கிரான்ட் i10 Nios 8,368
10 கியா செல்டோஸ் 8,270