Warning: Trying to access array offset on false in /home/automobiletamilancom/public_html/wp-content/plugins/jnews-amp/include/class/class-init.php on line 427

Warning: Trying to access array offset on false in /home/automobiletamilancom/public_html/wp-content/plugins/jnews-amp/include/class/class-init.php on line 428
ஸ்விஃப்ட் முதல் எர்டிகா வரை.., டாப் 10 கார்கள் - நவம்பர் 2020 | Automobile Tamilan

ஸ்விஃப்ட் முதல் எர்டிகா வரை.., டாப் 10 கார்கள் – நவம்பர் 2020

sonet suv features

இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற கார்களில் நவம்பர் 2020-ல் டாப் 10 இடங்களை பிடித்த பட்டியலில் தொடர்ந்து மாருதி சுசூகி முன்னிலை வகித்து வருகின்றது. அதனை தொடர்ந்து ஹூண்டாய் நிறுவனம் உள்ளது.

4 மீட்டருக்கு குறைந்த நீளம் பெற்ற காம்பேக்ட் எஸ்யூவி சந்தையில் கடந்த நவம்பர் 2020-ல் விட்டாரா பிரெஸ்ஸா காரை வீழ்த்தி சொனெட் எஸ்யூவி 11,417 யூனிட்டுகளை விற்பனை செய்து முதலிடத்தை கைப்பற்றியுள்ளது. அதனை தொடர்ந்து வென்யூ, விட்டாரா பிரெஸ்ஸா, நெக்ஸான் போன்றவை இடம்பெற்றுள்ளது.

பண்டிகை கால நிறைவை ஒட்டி இந்திய ஆட்டோமொபைல் சந்தை மந்தமான விற்பனை எண்ணிக்கையை நவம்பரில் பதிவு செய்துள்ளது. கிரெட்டா எஸ்யூவி காரை தொடர்ந்து கியா செல்டோஸ் விற்பனையில் சிறப்பான எண்ணிக்கையை தொடர்ந்து பதிவு செய்து வருகின்றது. காம்பேக்ட் எஸ்யூவி சந்தை உட்பட மற்ற பிரிவிலும் தென் கொரியா நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது.

விற்பனையில் டாப் 10 கார்கள் – நவம்பர் 2020

வரிசை தயாரிப்பாளர்/ மாடல் நவம்பர் 2020
1 மாருதி ஸ்விஃப்ட் 18,498
2 மாருதி பலேனோ 17,872
3 மாருதி வேகன் ஆர் 16,256
4 மாருதி ஆல்டோ 15,321
5 மாருதி டிசையர் 13,536
6 ஹூண்டாய் கிரெட்டா 12,017
7 கியா சொனெட் 11,417
8 மாருதி ஈக்கோ 11,183
9 ஹூண்டாய் கிரான்ட் i10 Nios 10,936
10 மாருதி எர்டிகா 9,557

 

web title : Top 10 selling Cars in India for November 2020

Exit mobile version