விற்பனையில் டாப் 10 கார்கள் – மார்ச் 2018

0

இந்திய மோட்டார் வாகன சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற நான்கு சக்கர பயணிகள் வாகனங்களில் மார்ச் 2018 மாதந்திர விற்பனையில் முதல் 10 இடங்களை பிடித்துள்ள கார்களை டாப் 10 கார்கள் – மார்ச் 2018 செய்தியில் தொடர்ந்து காணலாம்.

டாப் 10 கார்கள் – மார்ச் 2018

கடந்த சில மாதங்களாக மாருதி டிசையர் கார் சந்தையில் முதலிடத்தை பெற்றிருந்த நிலையில், தற்போது மீண்டும் மாருதி ஆல்டோ கார் 23,303 எண்ணிக்கையை பதிவு செய்து டாப் 10 வரிசையில் முதலிடத்தை பெற்றுள்ளது. 10 இடங்களில் மாருதி சுசூகி இந்தியா நிறுவனத்தின் 6 மாடல்கள் இடம்பெற்றுள்ளது.

Google News

மாருதி நிறுவனத்தின் ஸ்விஃப்ட், பெலினோ, விட்டாரா பிரெஸ்ஸா, வேகன் ஆர் ஆகிய கார்கள் தொடர்ந்து பட்டியில் உள்ளது. இதனை தொடர்ந்து ஹூண்டாய் நிறுவனத்தின் எலைட் ஐ 20 13,319 எண்ணிக்கையை பதிவு செய்து 6வது இடத்தில் இடம்பெற்றுள்ளது.  மேலும் இந்நிறுவனத்தின் க்ரெட்டா எஸ்யூவி 9வது இடத்தில் உள்ளது.

நாட்டின் முன்னணி யூட்டிலிட்டி வாகன தயாரிப்பாளராக விளங்கும், மஹிந்திரா நிறுவனத்தின் பிரபலமான பொலிரோ எஸ்யூவி பட்டியிலில் 10 வது இடத்தில் உள்ளது. பிரபலமான டாடா டியாகோ, செலிரியோ மற்றும் க்விட் ஆகிய மாடல்கள் முதல் 10 இடங்களை சில மாதங்களாக இடம்பெறவில்லை என்றாலும் சிறப்பான விற்பனையை பதிவு செய்து வருகின்றது.

தொடர்ந்து முழுமையான 2018 மார்ச் மாத விற்பனை விபர பட்டியலை காண கீழே வழங்கப்பட்டுள்ள அட்டவனையில் காணலாம்.

விற்பனையில் டாப் 10 கார்கள் அட்டவனை – மார்ச் 2018
வ. எண் தயாரிப்பாளர் மார்ச் – 2018
1. மாருதி சுசூகி ஆல்டோ 23,303
2. மாருதி சுசூகி டிசையர் 22,195
3. மாருதி சுசூகி ஸ்விஃப்ட் 19,207
4.  மாருதி சுசூகி பலேனோ 16,254
5. மாருதி சுசூகி வேகன்ஆர் 14,208
6. ஹூண்டாய் எலைட் ஐ20 13,319
7. மாருதி விட்டாரா பிரெஸ்ஸா 13,147
8. ஹூண்டாய் கிராண்ட் ஐ10 12,476
9. ஹூண்டாய் க்ரெட்டா 10,011
10. மஹிந்திரா பொலிரோ (Automobile Tamilan)   9,104