Automobile Tamilan

டொயோட்டா-மாருதி கூட்டணியில் புதிய எஸ்யூவி வருகை எப்போது ?

டொயோட்டா மற்றும் சுசூகி நிறுவனங்களுக்கிடையே ஏற்பட்டுள்ள ஓப்பந்தம் மூலமாக பல்வேறு ரீபேட்ஜ் செய்யப்பட்ட மாடல்கள் இந்தியா மற்றும் சர்வதேச அளவில் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்திய சந்தைக்கு என பிரேத்தியேகமான எஸ்யூவி காரை இரு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்க உள்ளது.

இந்தியாவில் பிரபலமாக விளங்குகின்ற ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ் என இரு மாடல்களை மிக கடுமையாக எதிர்கொள்ளும் வகையில் தயாரிக்கப்பட உள்ள மாருதி-டொயோட்டா எஸ்யூவி காரினை 2022 ஆம் ஆண்டின் துவக்க மாதங்களில் எதிர்பார்க்கலாம். டொயோட்டாவின் வளரும் நாடுகளுக்கான DNGA பிளாட்ஃபாரத்தில் உருவாக்கப்பட உள்ள 4.3 மீட்டர் நீளம் உள்ள மிகவும் ஸ்டைலிஷான மற்றும் கம்பீரமான தோற்றத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கலாம்.

இரு நிறுவனங்களும் பெருமளவில் பாகங்களை மாற்றிக் கொள்ளாமல், தோற்ற அமைப்பில் ரீபேட்ஜ் செய்யப்பட்டு சிறிய அளவில் மட்டுமே ஸ்டைலில் வித்தியாசம் அமைந்திருக்கும்.

இந்த எஸ்யூவி காரில் சுசூகி நிறுவனத்தின் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் பயன்படுத்தப்படலாம். டீசல் இன்ஜின் இடம்பெறுவது குறித்து எந்த தகவலும் இல்லை.

மாருதியின் பலேனோ மற்றும் விட்டாரா பிரெஸ்ஸா கார்களை டொயோட்டா நிறுவனம் ரீபேட்ஜ் செய்து கிளான்ஸா, அர்பன் க்ரூஸர் என விற்பனை செய்து வருகின்றது. இந்நிலையில் 2022 முதல் டொயோட்டாவின் ஆலையில் தயாரிக்க திட்டமிடப்பட்ட அர்பன் க்ரூஸர் மாடல் தொடர்ந்து மாருதி ஆலையிலே தியாரிக்கவும், அதற்கு மாற்றாக புதிய எஸ்யூவி காரை டொயோட்டா தயாரிக்கலாம் என தெரிய வந்துள்ளது.

உதவி – ஆட்டோ கார் இந்தியா

Exit mobile version