Home Car News

எட்டியோஸ் உட்பட இந்தியாவில் டொயோட்டா 7 கார்களை நீக்குகிறதா..!

ஏப்ரல் முதல் நடைமுறைக்கு வரவிருக்கும் பிஎஸ் 6 மாசு விதிகளுக்கு உட்பட்டு அதீக விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்யாத எட்டியோஸ் முதல் ப்ரியஸ் கார் வரை சுமார் 7 மாடல்களை நீக்க உள்ளது.

இந்நிறுவனத்தின் குறைந்த விலை கார் மாடலான எட்டியோஸ் லிவா, எட்டியோஸ் , பிளாட்டினம் எட்டியோஸ், எட்டியோஸ் கிராஸ் போன்றவற்றுடன் ஆடம்பர மாடல்களான கரோல்லா அல்டிஸ், லேண்ட் க்ரூஸர் பிராடோ, லேண்ட் க்ரூஸர் மற்றும் ப்ரியஸ் போன்ற மாடல்களை பிஎஸ்6 முறைக்கு மாற்றாமல் கைவிட்டுள்ளது. அதே நேரத்தில் இந்நிறுவனத்தின் இன்னோவா கிரிஸ்டா காரில் இடம்பெற்றுள்ள 2.8 லிட்டர் டீசல் என்ஜின் கைவிடப்படுகின்றது. ஆனால் ஃபார்ச்சூனரில் தொடர உள்ளது.

டொயோட்டா நிறுவனம் கிளான்ஸா, இன்னோவா கிரிஸ்டா, பார்ச்சூனர் மற்றும் கேம்ரி ஹைப்ரிட் போன்றவற்றை விற்பனை செய்ய உள்ளது. மேலும் இந்நிறுவனம் ஆடம்பர வெல்ஃபைர் பிரீமியம் எம்பிவியை பிப்ரவரி 26ந் தேதி அறிமுகப்படுத்த உள்ளது. மேலும், டொயோட்டா பிராண்டில் விட்டாரா ப்ரெஸ்ஸா எஸ்யூவி மற்றும் எர்டிகா காரையும் கொண்டு வரவுள்ளது.

Exit mobile version