Automobile Tamil

விரைவில்.., இந்தியாவில் டொயோட்டா ஹைலக்ஸ் பிக்கப் அறிமுகமாகிறது

சர்வதேச அளவில் பிரபலமாக விளங்குகின்ற டொயோட்டா நிறுவனத்தின் ஹைலக்ஸ் பிக்கப் டிரக்கினை விற்பனைக்கு கொண்டு வருவதனை உறுதிசெய்யும் வகையல் தொலைக்காட்சி விளம்பரத்திற்கு படப்பிடிப்பில் ஈடுபட்டு வரும் படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

பல்வேற் வெளிநாடுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்ற ஹைலக்ஸ் பிக்கப் டிரக்கினை இந்திய சந்தைக்கு கொண்டு வரவுள்ளதை தொடர்ந்து, இந்த மாடல் பற்றி சில முக்கிய விபரங்களை அறிந்து கொள்ளலாம்.

இன்னோவா கிரிஸ்டா, ஃபார்ச்சூனர் எஸ்யூவி வடிவமைக்கப்பட்டுள்ள IMV-2 பிளாட்ஃபாரத்தில் உருவாக்கப்பட்டுள்ள ஹைலக்ஸ் மாடலில் இன்டிரியர் அமைப்பில் பெரும்பாலான வடிவமைப்பு ஃபார்ச்சூனரில் இருந்து பெறப்பட்டுள்ளது. 8-இன்ச் தொடுதிரை சிஸ்டத்தில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே இணைப்பு, எலக்ட்ரிக் முறையால் சரிசெய்யக்கூடிய டிரைவர் இருக்கை, ஆட்டோ ஏர்-கான், வெளிப்புற எல்இடி விளக்குகள் போன்றவை பெற்றுள்ளது.

ஹைலக்ஸில் 2.4-லிட்டர் டீசல் என்ஜின் 150 PS மற்றும் 400 Nm மற்றும் 2.8-லிட்டர் டர்போடீசல் எஞ்சின் 204 PS மற்றும் 500 Nm வெளிப்படுத்தும். இதில் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்பட உள்ளது.

முதற்கட்டமாக இரண்டு கேப் பெற்றதாக அமைந்துள்ள இந்த பிக்கப் டிரக்கில் ஒற்றை கேப் வேரியண்ட் சற்று தாமதமாக விற்பனைக்கு வரக்கூடும். இந்தியாவில் கிடைக்கின்ற இசுசூ V-Cross மாடலுக்கு சவாலாக விளங்கும். விற்பனைக்கு ஜனவரி 2022ல் எதிர்பார்க்கப்படுகின்றது.

Exit mobile version