கடந்த பிப்ரவரி 2017யில் டொயோட்டா மற்றும் சுசூகி நிறுவனங்களுக்கிடைய கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தம் வாயிலாக பல்வேறு தொழில்நுட்பங்கள் மற்றும் வாகனங்களை பகிர்ந்து கொள்வதனை அடுத்து சுசூகி கார்களை டொயோட்டா இந்தியா ஆலையில் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டொயோட்டா – சுசூகி கூட்டணி

டொயோட்டா மற்றும் சுசுகி ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து ஆட்டோமொபைல் சார்ந்த துறையில் முன்னணியாக விளங்கும் மாருதி சுசூகி நிறுவனம், இந்தியாவில் தனது ஆலைகளில் முழுமையான உற்பத்தி திறனை எட்டியிருந்தாலும் தொடர்ந்து குறிப்பிட்ட சில மாடல்களுக்கு நீன்ட காத்திருப்பு காலத்தை பெற்று விளங்குகின்றது.

இந்நிலையில் டொயோட்டா மற்றும் சுசூகி கூட்டணியில் மேற்கொள்ளப்பட்டுள்ள புதிய திட்டத்தின் அடிப்படையில் டொயோட்டா, டென்ஸோ ஆகிய நிறுவனங்களின் டெக்னாலாஜி சார்ந்த அம்சங்களை பயன்படுத்தி சுசூகி நிறுவனம் சிறந்த செயல்திறன் மற்றும் மைலேஜ் சார்ந்த அம்சங்களை வெளிப்படுத்தும் மாடல்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த கார்கள் இந்தியாவில் அமைந்துள்ள டொயோட்டா கிரிலோஸ்கர் மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாயிலாக உற்பத்தி செய்யப்பட்டு இந்தியா , ஆப்பிரிக்கா மற்றும் சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளுக்கு சுசூகி மற்றும் டொயோட்டா பிராண்டில் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

மாருதி சுசூகி இந்திய சந்தையில் மிகப்பெரிய பங்களிப்பை கொண்டுள்ள நிலையில், டொயோட்டா நிறுவனமும் தனது இந்திய சந்தை மதிப்பினை உயர்த்துவதற்கான நோக்கத்தை கையிலெடுத்துள்ளது.