அர்பன் க்ரூஸர் எஸ்யூவி காரின் விபரம் வெளியானது

0

toyota urban cruiser

வரும் செப்டம்பரில் டொயோட்டா விற்பனைக்கு கொண்டு வரவுள்ள அர்பன் க்ரூஸர் எஸ்யூவி காரின் பிரவுச்சர் விபரம் இணையத்தில் கசிந்துள்ளது. மாருதியின் விட்டாரா பிரெஸ்ஸா மாடலின் ரீபேட்ஜ் செய்யப்பட்ட மாடலாகும்.

பிரசத்தி பெற்ற 4 மீட்டருக்கு குறைவான நீளம் பெற்ற காம்பேக்ட் ரக சந்தையில் முதல் மாடலை டொயோட்டா விற்பனைக்கு வெளியிட உள்ளதால் எதிர்பார்ப்புள் அதிகரித்துள்ளது. முதன்முறையாக டொயோட்டா-சுசுகி கூட்டணியில் வெளியான பலேனோ அடிப்படையிலான கிளான்ஸா சீரான விற்பனையை பதிவு செய்து வருகின்றது. தற்போது இரண்டாவது மாடலாக இந்த எஸ்யூவி விளங்க உள்ளது.

முன்புற அமைப்பில் டொயோட்டாவின் ஃபார்ச்சூனர் காரில் உள்ளதை போன்ற கிரில் அமைப்பினை பெற்று பனி விளக்கு அறை மட்டும் விட்டாரா பிரெஸ்ஸா காரிலிருந்து மாறுபட்டுள்ளது. மற்றபடி, பனி விளக்குகள், எல்இடி ஹெட்லேம்ப் , எல்இடி டெயில் லைட் போன்றவற்றில் எந்த மாற்றங்களும் இல்லை.

இன்டிரியரின் டேஸ்போர்டு மற்றும் கேபின் அமைப்பில் எந்த மாற்றமும் இல்லை. டொயோட்டா லோகோ மட்டும் இணைக்கப்பட்டு பிரெஸ்ஸாவின் கருப்பு நிற அப்ஹோல்ஸ்ட்ரிக்கு பதிலாக பிரவுன் நிறத்தை பெற்றுள்ளது. இன்டிரியரில் கருப்பு – பிரவுன் நிறத்தை கொண்டுள்ளது. 7.0 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை பெற்று ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே ஆகியவற்றை கொண்டுள்ளது.  க்ரூஸ் கன்ட்ரோல், ஸ்டியரிங் மவுன்டேட் ஆடியோ கன்ட்ரோல், மழையை உணர்ந்து செயல்படும் வைப்பர்கள் உள்ளது.

1.5 லிட்டர் K சீரிஸ் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 103 ஹெச்பி பவர், 138 என்எம் டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் SHVS ஹைபிரிட் நுட்பத்துடன் 4 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸை கொண்டுள்ளது.

அர்ப1ன் க்ரூஸர் காரின் பெட்ரோல் மாடல் மைலேஜ் லிட்டருக்கு 17.03 கிமீ (மேனுவல்) மற்றும் ஆட்டோமேட்டிக் மாடல் 18.76 கிமீ ஆகும்.

பாதுகாப்பு சார்ந்த அமைப்பில் இரண்டு ஏர்பேக்குகள், ஏபிஎஸ் உடன் இபிடி, ரியர் பார்க்கிங் சென்சார் மற்றும் ரியர் வியூ கேமரா போன்றவை உள்ளது. அர்பன் குரூசர் காரில் ஆறு வண்ண விருப்பங்களில் வெளியிடப்பட உள்ளது. சில்வர், ஆரஞ்சு, கிரே, நீலம், வெள்ளை மற்றும் பிரவுன். டூயல் டோன் நிறங்களில் பிரவுன் / கருப்பு, ஆரஞ்சு / வெள்ளை மற்றும் நீலம் / கருப்பு பெற்றதாக அமைந்துள்ளது.

டொயோட்டா நிறுவனம் இந்த காருக்கு மூன்று வருடம் அல்லது 1,00,000 கிமீ வாரண்டி வழங்கப்படுகின்றது. இன்று முதல் ஆன்லைன் மற்றும் டீலர்கள் வாயிலாக ரூ.11,000 செலுத்தி முன்பதிவு மேற்கொள்ளலாம். விற்பனைக்கு செப்டம்பர் மாத மத்தியில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.