ரெனால்ட் பட்ஜெட் விலை புதிய எஸ்யூவி பெயர் கைகெர்

Renault Hbc

ரெனால்டின் 4 மீட்டருக்கு குறைந்த நீளத்தை பெற உள்ள எஸ்யூவி காருக்கு ரெனால்ட் கைகெர் (Renault Kiger) என்ற பெயரை பயன்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கைகெர் என்ற பெயரை இந்தியாவின் வர்த்தக முத்திரை தொடர்பான விபரங்கள் மூலம் கிடைத்துள்ளது.

சமீபத்தில் வெளியான ட்ரைபர் மாடலை தொடர்ந்து அடுத்ததாக இந்நிறுவனம் காப்புரிமை கோரி விண்ணப்பித்துள்ள பெயர் தான் ரெனால்ட் கைகெர் ஆகும். கைகெரின் பொருள் என்னவென்றால் அமெரிக்காவில் உள்ள ஒரு குதிரை இனத்தின் பெயராகும்.

இந்நிறுவனத்தின் பிஎஸ்6 மாசு உமிழ்வுக்கு இணக்கமான மாடல்கள் ஜனவரி இறுதி வாரத்தில் கிடைக்க துவங்கும். அதனை தொடர்ந்து இந்நிறுவனம் ட்ரைபர் கார் வடிவமைக்கப்பட்ட CMF-A+ பிளாட்ஃபாரத்தில் 4 மீட்டருக்கு குறைந்த நீளத்தை பெற்ற எஸ்யூவி காரை விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. இந்த மாடல் சந்தையில் கிடைக்கின்ற ஹூண்டாய் வென்யூ, விட்டாரா பிரெஸ்ஸா, எக்ஸ்யூவி 300, நெக்ஸான், ஈக்கோஸ்போர்ட் மற்றும் வரவுள்ள கியா QYI எஸ்யூவி போன்றவற்றை எதிர்கொள்ளும் திறனுடன் மற்ற மாடல்களை விட விலை குறைவாக அமைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

HBC என்ற குறீயிடு பெயரில் தயாரிக்கப்படுகின்ற கைகெர் எஸ்யூவி மாடலில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படலாம். இதில் 5 வேக மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் இடம்பெற வாய்ப்புள்ளது. மேலும் ரெனால்ட் காம்பேக்ட் எஸ்யூவி விலை ரூ.6.50 லட்சத்தில் தொடங்க வாய்ப்புகள் உள்ளது.

உதவி – carwale