வரவிருக்கும் 2020 ஹூண்டாய் வெர்னா ஸ்பை படங்கள் வெளியானது

Hyundai Verna

அடுத்த சில மாதங்களில் வெளியாக உள்ள 2020 ஹூண்டாய் வெர்னா காரின் முழுமையான படங்கள் சீனாவிலிருந்து வெளியாகியுள்ளது. முதன்முறையாக எவ்விதமான முக்காடும் இல்லாமல் வெர்னா தரிசனம் கிடைத்துள்ளது.

மிகவும் ஸ்டைலிஷான தோற்ற பொலிவினை வழங்குகின்ற வெர்னா அமைப்பில் சோனாடா, எலன்டரா மற்றும் ஐயானிக் போன்ற காரகளின் தோற்ற உந்துதலை பின்பற்றி அமைந்துள்ளது.

புதிய வெர்னாவின் முன்பெக்க ஸ்டைலிங் இப்போது விற்பனையில் கிடைக்கின்ற மாடலுடன் ஒப்பிடும்போது மிகவும் ஆக்ரோஷமான மற்றும் ஸ்டைலிஷான வளைவுகளை பெற்ற வடிவமைப்பை கொண்டதாக உள்ளது. முன்புற கிரில் மற்றும் பம்பர் புதுப்பிக்கப்பட்ட அகலமான பாரம்பரிய கேஸ்கேடிங் கிரிலுடன், புதுப்பிக்கப்பட்ட புராஜெக்டர் ஹெட்லைட், பனி விளக்குகள் அறையை கொண்டுள்ளது.

புதிய வெர்னா காரில் நேர்த்தியான அலாய் வீல் டிசைனை பெற்று டைமன்ட் கட் அலாய் வீலாக இரட்டை நிறத்துடன் வெனியூ காரில் உள்ளதை போன்று அமைந்துள்ளது. பின் புறத்தில் பூட் டிசைன் புதுப்பிக்கப்பட்டிருப்பதுடன், தட்டையான எல்இடி ஸ்டீரிப் டெயில் லைட் மற்றும் நெம்பர் பிளேட் கீழாக வழங்கப்பட்டுள்ளது.

இன்டரியரில் பல்வேறு கனெக்ட்டிவிட்டி சார்ந்த வசதிகளை பெற உள்ள இந்த காரில் ஹூண்டாய் வெனியூ மாடலில் இடம்பெற்றிருக்கின்ற ப்ளூலிங்க் டெக்னாலாஜி  வசதி இணைக்கப்பட்டிருக்கும்.

2020 ஹூண்டாய் வெர்னா வரவிருக்கும் பிஎஸ் 6 விதிமுறைகளின் காரணமாக புதிய என்ஜினை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்களைப் பெறும் மற்றும் டார்க் / பவர் போன்றவற்றில் மாற்றங்கள் இருக்கும். பெட்ரோல் மாடலில் 48 வோல்ட் ஹைபரிட் ஆப்ஷனை பெற வாய்ப்புள்ளது.

ஹோண்டா சிட்டி, மாருதி சியாஸ், டொயோட்டா யாரிஸ், ஸ்கோடா ரேபிட் மற்றும் வோக்ஸ்வாகன் வென்டோ போன்ற கார்களுடன் வெர்னா சந்தையை பகிர்ந்து கொள்கிறது. இந்தியாவில் அடுத்த ஆண்டின் தொடக்க மாதங்களில் விற்பனைக்கு எதிர்பார்க்கலாம்.

image Source – AutoHome.com.cn

Exit mobile version