வோக்ஸ்வேகன் ஏமியோ ஸ்பெஷல் எடிசன் விற்பனைக்கு வந்தது

வோக்ஸ்வேகன் ஏமியோ கார்

ஜெர்மனியின் வோக்ஸ்வேகன் நிறுவனம், இந்தியாவில் தயாரித்த வோக்ஸ்வேகன் ஏமியோ காரானது மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட மாடலாகும். பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் இந்த ஸ்பெஷல் எடிசன் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.

சமீபத்தில் இந்நிறுவனம் வோக்ஸ்வேகன் போலோ, வென்ட்டோ, ஏமியோ போன்ற  மாடல்களில் பிளாக் & ஒயிட் எடிசனை வெளியிட்டிருந்த நிலையில் அடுத்த கார்ப்பரேட் எடிசனை மீண்டும் ஏமியோ காரில் மட்டும் வெளியட்டுள்ளது.

ஏமியோ கார்ப்பரேட் எடிஷன் சிறப்புகள்

ஏமியோ காரில் இடம்பெற்றுள்ள மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட Highline Plus  வேரியன்ட் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் ஆட்டோமேட்டிக் மாடலில் இந்த சிறப்பு பதிப்பு வெளியாகவில்லை.

பல்வேறு சிறப்பு வசதிகளை பெற்றுள்ள இந்த எடிசனில் மொத்தம் 5 நிறங்கள் கிடைக்க உள்ளது.  நீலம், சில்வர், ஒயிட்,டோஃபி பிரவுன் மற்றும் கார்பன் ஸ்டீல் போன்றவையாகும். பாதுகாப்பு சாரந்த அம்சங்களாக ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், இரு ஏர்பேக்  நிரந்தர பாதுகாப்பு அம்சமாகவும், க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், ரெயின் சென்சிங் வைப்பர்கள், கார்னரிங் லைட்டுகள், தொடுதிரையுடன் கூடிய மியூசிக் சிஸ்டம் போன்றவை உள்ளது.

ஏமியோ கார்ப்பரேட் எடிசன் பெட்ரோல் மாடலுக்கு ரூபாய் 6.69 லட்சம் விலையும், டீசல் மாடலுக்கு ரூபாய் 7.99 லட்சம் விலை (எக்ஸ்ஷோரூம்) நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.