Automobile Tamil

2021 ஃபோக்ஸ்வாகன் போலோ ஃபேஸ்லிஃப்ட் அறிமுகமானது

ஃபோக்ஸ்வாகன் நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட 2021 போல காரில் தோற்ற அமைப்பு மற்றும் இன்டிரியரில் சில மாற்றங்களுடன் கூடுதலான வசதிகளை பெற்றதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஃபோக்ஸ்வாகன் ID.3 கான்செப்ட் காரின் வடிவ தோற்ற உந்துதலை பெற்றதாக வடிவமைக்கப்பட்டுள்ள போலோ காரில் டூயல் பீம் எல்இடி ஹெட்லைட் இணைக்கப்பட்டு, டாப் வேரியண்டில் மேட்ரிக்ஸ் எல்இடி ஹெட்லைட் வழங்கப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட பம்பர் உட்பட பின்புறத்தில் புதிய வடிவ டெயில்லைட் கொடுக்கப்பட்டுள்ளது.

அடுத்தப்படியாக, இன்டிரியரில் 10.25 அங்குல டிஜிட்டல் கிளஸ்ட்டர், 9.2 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் பல்வேறு நவீனத்துவமான வசதிகளை கொண்டிருக்கின்றது. அடாப்ட்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், லேன் கீப் அசிஸ்ட்டிங், வயர்லெஸ் சார்ஜிங், கீலெஸ் என்ட்ரி, லெவல் டூ தானியங்கி டெக்னாலாஜி கொடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து இன்ஜின் ஆப்ஷனில் எந்த மாற்றமும் இல்லாமல் 1.0 லிட்டர் மூன்று சிலிண்டர் டர்போ சார்ஜ்டு இன்ஜின் அதிகபட்சமாக 78 ஹெச்பி பவர் முதல் 108 ஹெச்பி வரை மாறுபட்ட பவரில் , மேனுவல், டூயல் ஆட்டோ கிளட்ச் பெற்றதாக ஃபோக்ஸ்வாகன் போலோ கார் கிடைக்கின்றது.

இந்திய சந்தைக்கு ஏற்ற போலோ காரை புதிய MQB-A0-IN பிளாட்ஃபாரத்தில் வடிவமைத்து 2023 ஆம் ஆண்டின் துவக்கத்தில் வெளியிட இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Exit mobile version