ஃபோக்ஸ்வாகன் போலோ, வென்ட்டோ காரில் சிவப்பு மற்றும் வெள்ளை எடிசன் அறிமுகம்

Volkswagen Polo Red White Edition

பண்டிகை காலத்தை முன்னிட்டு ஃபோக்ஸ்வாகன் இந்தியா நிறுவனம், போலோ மற்றும் வென்ட்டோ என இரு மாடல்களிலும் சிவப்பு மற்றும் வெள்ளை எடிசனை (Red and White ) விற்பனைக்கு வெளியிட்டுள்ளது.

ஃபோக்ஸ்வாகன் போலோ, வென்ட்டோ ரெட் & ஒயிட் எடிசன்

விற்பனையில் கிடைக்கின்ற போலோ ஹைலைன் பிளஸ் AT வேரியண்டின் அடிப்படையில் வந்துள்ள சிறப்பு எடிசனில் வெள்ளை,  சன்செட் சிவப்பு மற்றொரு ஃபிளாஷ் சிவப்பு என மூன்று நிறங்களிலும் மேற்கூறை கருப்பு நிறமாகவும், ஸ்பாய்லர், விங் மிரர் போன்றவற்றையும் கருப்பு நிறத்தில் கொடுத்துள்ளது.

இரு கார்களிலும் 1.0 லிட்டர் TSI டர்போ பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 110 ஹெச்பி மற்றும் 175 என்எம் டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இதன் போலோ டி.எஸ்.ஐ மைலேஜ் லிட்டருக்கு 18.24 கிமீ, செடான் ரக வென்ட்டோ டி.எஸ்.ஐ மைலேஜ் லிட்டருக்கு 17.69 கிமீ ஆகும்.

சிவப்பு மற்றும் வெள்ளை பதிப்பில் இரண்டு கார்களும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மட்டும் பெற்றுள்ளது. மேலும் சன்செட் சிவப்பு நிறத்தை வென்ட்டோ கார் பெறவில்லை.

ஃபோக்ஸ்வாகன் போலோ விலை ரூ.9.20 லட்சம்

ஃபோக்ஸ்வாகன் வென்ட்டோ விலை ரூ.11.49 லட்சம்

Volkswagen Vento Red White Edition

web title : Volkswagen Polo, Vento red and white Edition variants launched