வோக்ஸ்வாகன் போலோ, வெண்டோ மற்றும் ஜெட்டா கார்களை திரும்ப பெறுகிறது

0

வோக்ஸ்வாகன் நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்த தனது போலோ, வெண்டோ மற்றும் ஜெட்டா கார்களை திரும்ப பெற உள்ளது. இந்த கார்களில் சில அப்டேட்கள் மற்றும் O-ரிங் மாற்றம் செய்வதற்காக இந்த திரும்ப பெறும் நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளதாக இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வோக்ஸ்வாகன் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், வெண்டோ 1.5 லிட்டர் மற்றும் போலோ ஜிடி 1.5 லிட்டர் ஆகிய மெனுவல் டிரான்மிஷன்களுக்கு திரும்ப பெறுவதாக அறிவித்தது. ஜெட்டா 1.4 TSI கார்களை O-ரிங் மாற்றத்திற்காகவும் திரும்ப பெறுவதாகவும், இந்த அப்டேட்கள் 30 நிமிடத்தில் வோக்ஸ்வாகன் சர்விஸ் ஸ்டேஷன்களில் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Google News

இந்த மாற்றம் மற்றும் அப்டேட்கள் இலவசமாகவே மேற்கொளளப்படும் என்று கார் தயாரிப்பாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வோக்ஸ்வாகன் கார்களின் உரிமையாளர்கள் தங்கள் கார்கள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளதாக என்று வோக்ஸ்வாகன் நிறுவனம் இணையதளத்தில் வெளியிட்டுள்ள பட்டியலில் செக் செய்து கொள்ளலாம். இதும்த்டுமின்றி 18001020909 அல்லது 18002090909 என்ற கஸ்டமர் கேர் நம்பர்களில் தொடர்பு கொண்டு செக் செய்து கொள்ளலாம்.