வோக்ஸ்வேகன் வென்ட்டோ ஆல்ஸ்டார் விரைவில்

வோக்ஸ்வேகன் வென்ட்டோ ஆல்ஸ்டார் என்ற பெயரில் கூடுதலான வசதிகளை பெற்ற மாடலாக அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில் எஞ்சின் ஆற்றல் மற்றும் டார்க் என எவ்விதமான மாற்றங்களும் இல்லை.

வோக்ஸ்வேகன் வென்ட்டோ ஆல்ஸ்டார்

கடந்த ஆண்டில் நடைபெற்ற வோக்ஸ்ஃபெஸ்ட் விழிவின்போது போலோ ஆல்ஸ்டார் கார் அறிமுகம் செய்யப்பட்டிருந்த நிலையில் இந்த வருடத்தில் அக்டோபர் இரண்டாவது வாரத்தில் நடைபெற உள்ள இவ்விழாவின் போது கூடுதல் வசதிகளை பெற்ற மாடலாக வென்ட்டோ ஆல்ஸ்டார் வரவுள்ளது.

இந்த மாடலில் எஞ்சின் ஆற்றல் மற்றும் டார்க் ஆகியவற்றில் மாற்றம் இல்லாமல் கம்ஃபோர்ட் லைன் வேரியன்ட் அடிப்படையில் லினா அலாய் வீல், அலுமினியம் பெடல், பிளாக் மற்றும் கிரே இன்டிரியர், லெதர் ஹேண்ட் பிரேக் மற்றும் ஆல்ஸ்டார் ஸ்கஃப் பிளேட் ஆகியவற்றை பெற்றதாக வரவுள்ளது.

1.5 லிட்டர் TDI டீசல் 110 ஹெச்பி வெளிப்படுத்தும் இன்ஜினை பெற்றுள்ளது. இதன் டார்கில் மாற்றமில்லாமல் 250 நியூட்டன்மீட்டரை தொடர்கின்றது. இதில் 5 வேக மேனுவல் மற்றும் 7 வேக டிஎஸ்ஜி ஆட்டோ கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

1.6 லிட்டர் TSI பெட்ரோல் 105 ஹெச்பி வெளிப்படுத்தும் இன்ஜினை பெற்றுள்ளது. இதன் டார்கில் மாற்றமில்லாமல் 175 நியூட்டன்மீட்டரை தொடர்கின்றது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

வருகின்ற அக்டோபர் இரண்டாவது வாரத்தில் வோக்ஸ்வேகன் வென்ட்டோ ஆல்ஸ்டார் விற்பனைக்கு வரவுள்ளது.

பட உதவி – autosarena

 

Recommended For You