ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடி ஸ்போர்ட் எடிஷன் கார் அறிமுகம்

ஃபோக்ஸ்வேகன் போலோ காரில் கூடுதலான வசதிகளை பெற்ற ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடி ஸ்போர்ட் மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் என இருவிதமான எஞ்சின் ஆப்ஷன்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடி ஸ்போர்ட் எடிஷன் கார் அறிமுகம் 1

ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடி ஸ்போர்ட்

  • வரையறுக்கப்பட்ட பதிப்பாக ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடி ஸ்போர்ட் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
  • எஞ்சின் டார்க் மற்றும் பவர் போன்றவற்றில் எந்த மாற்றங்களும் இடம்பெறவில்லை.
  • இன்டிரியர் மற்றும் எக்ஸ்டிரியர் ஆப்ஷனில் மட்டுமே கூடுதல் வசதிகளை பெற்றுள்ளது.

ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடி ஸ்போர்ட் எடிஷன் கார் அறிமுகம் 2

சாதாரண போலோ காரில் இடம்பெற்றுள்ள எஞ்சினை பெற்றுள்ள ஜிடி ஸ்போர்ட் ஹேட்ச்பேக் காரில் 1.2 லிட்டர் TSI பெட்ரோல் ட்ரோபாசர்ஜ்டு 4 சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 5,000 ஆர்பிஎம் சுழற்சி வேகத்தில் 105 hp பவரையும், 1500 ஆர்பிஎம் முதல் 2500 ஆர்பிஎம் சுழற்சியில்  175 Nm டார்க் வழங்கும். இதில் 7 வேக DSG கியர்பாக்ஸ் இடம் பெற்றுள்ளது.

போலோ GT ஸ்போர்ட் டீசல் பதிப்பு மாடலில் 1.5 லிட்டர் TDI ட்ரோபாசர்ஜ்டு 4 சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 4,400 ஆர்பிஎம் சுழற்சி வேகத்தில் 110 hp பவருடன், 1500 ஆர்பிஎம் முதல் 2500 ஆர்பிஎம் சுழற்சியில் 250 Nm டார்க் வழங்கும். இதில் 7 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம் பெற்றுள்ளது.

வெளிகட்டுமான அமைப்பில் எந்த மாற்றங்களும் இல்லாமல் புதிய 16 அங்குல அலாய் வீல் , பாடி கிராபிக்ஸ் , பின்புற ஸ்பாய்லர் , மேற்கூறை போன்றவற்றில் கருப்பு நிற வண்ணத்தில் அமைந்துள்ளது. தோற்றத்தில் வெள்ளை மற்றும் சிவப்பு என இரு நிறங்களில் மட்டுமே கிடைக்கும்.

இன்டிரியர் அமைப்பில் வசதிகளில் எந்த மாற்றங்களும் இல்லாமல் லெதர் இருக்கை அம்சத்துடன் ஸ்போர்ட்டிவான இருவண்ணத்துடன் அப்ஹோல்ஸ்ட்ரி பெற்றுள்ளது.

ஃபோக்ஸ்வேகன் போலோ ஜிடி ஸ்போர்ட் எடிஷன் கார் அறிமுகம் 3

போலோ GT ஸ்போர்ட்

போலோ GT ஸ்போர்ட் TSI பதிப்பு விலை ரூபாய் 9.11 லட்சம் , போக்ஸ்வேகன் போலோ GT ஸ்போர்ட் TDI பதிப்பின் விலை ரூபாய் 9.21 லட்சம். (அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் டெல்லி)

Recommended For You

About the Author: Rayadurai