மாருதி சுசூகி பாதுகாபற்ற கார்களை தயாரிக்கிறதா ? – எஸ்-பிரெஸ்ஸோ கிராஷ் டெஸ்ட்

சர்வதேச கிராஷ் டெஸ்ட் மையத்தால் Safer Cars For India திட்டத்தில் சோதனை செய்யப்பட்ட கார்களில் மாருதி சுசூகி எஸ்-பிரெஸ்ஸோ பூஜ்ய நட்சத்திர மதிப்பீட்டை பெற்றுள்ளது. முன்பாக இந்நிறுவனத்தின்

மினி எஸ்யூவி கார் என அறிமுகம் செய்யப்பட்ட மாருதியின் எஸ்-பிரெஸ்ஸோ காரினை உலகளாவிய புதிய கார் மதிப்பீட்டு திட்டம் (Global New Car Assessment Programme – Global NCAP) மையத்தின் கிராஷ் டெஸ்ட் சோதனையில் மணிக்கு 64 கிமீ வேகத்தில் மாருதி எஸ்-பிரெஸ்ஸோ VXi ஒரு ஏர்பேக் பெற்ற மாடல் மோத வைத்து சோதனை நிகழ்த்தப்பட்டது.

தலைக்கு மட்டும் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கழுத்து, நெஞ்சு பகுதிக்கு சிறப்பான பாதுகாப்பினை வழங்கவில்லை. இந்த காருக்கு கட்டுமானம் மற்றும் கால் வைக்கின்ற பகுதி  ‘நிலையற்றது’ என்றும், பாடிஷெல் ‘மேலும் பளுவை தாங்கும் ’ திறன் கொண்டதல்ல என்று குறிப்பிட்டுள்ளது.

வயதுவந்தோர் பாதுகாப்பில் எஸ்-பிரெஸ்ஸோ மாடலுக்கு 17 புள்ளிகளில் 0 புள்ளிகளைப் பெற்றுள்ளது. குழந்தை சார்ந்த பாதுகாப்பு அமைப்பில் 49 புள்ளிகளுக்கு 13.84 புள்ளிகளை மட்டுமே எடுத்துள்ளது.

இதற்கு முன்பாக சோதனை செய்யப்பட்ட மாருதியின் பல்வேறு கார்களும் மிக குறைவான மதிப்பீட்டை மட்டுமே பெற்று வந்துள்ளன. குறிப்பாக இந்திய சந்தையில் டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி 300, டாடா அல்ட்ராஸ் என இரு மாடல்கள் மட்டும் 5 நட்சத்திர மதிப்பீட்டை பெற்றிருப்பதுடன் 4 நட்சத்திர மதிப்பீட்டை டியாகோ டிகோர் ஆகியவை பாதுகாப்பினை உறுதி செய்த மாடல்களாகும்.

2020 Safer Cars For India திட்டத்தில் சோதனை செய்யப்பட்ட ஹூண்டாய் கிராண்ட் ஐ10 இரண்டு ஏர்பேக்குகளை பெற்ற மாடல் 2 நட்சத்திர மதிப்பீட்டையும், கியா செல்டோஸ் 2 ஏர்பேக்குகளை பெற்ற மாடல் 3 நட்சத்திர பாதுகாப்பினை மட்டுமே கொண்டுள்ளது.

Web Title : Zero Star Crash Rating For Maruti s-presso – Global NCAP

Exit mobile version