குதிரை வண்டிகளை போல பெட்ரோல், டீசல் கார்கள் காணாமல் போகும்..!

20 ஆம் நூற்றாண்டில் தொடக்க காலத்தில் ஏற்பட்ட மோட்டார் வாகன துறை புரட்சி போன்றே அடுத்த 15 ஆண்டுகளில் 95 சதவிகித மக்களிடம் தனிநபர் கார்கள் இருக்காது எனவும், பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களின் பயன்பாடு முற்றிலும் மறைந்து போகும் என டோனி சேபா கூறியுள்ளார்.

டோனி சேபா கணிப்பு

20 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட மோட்டார் வாகன புரட்சியை போன்றே அடுத்த 15 ஆண்டுகளில் மிகப்பெரிய மாற்றத்தை ஆட்டோமொபைல் துறை சந்திக்கும் என ஆய்வறிக்கை வாயிலாக சிலிக்கான வேலியைச் சேர்ந்த வல்லுனர் டோனி சேபா கூறியுள்ளார். மேலும் சர்வதேச அளவில் எண்ணெய் நிறுவனங்கள் மிகப்பெரிய வீழ்ச்சி அடையும் என தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து துறை பற்றிய மாற்று சிந்தனை 2020-2030 (Rethinking Transportation) என்ற பெயரில் ஸ்டாண்ட்ஃபோர்டு பல்கலைகழகம் உலகளவில் நடத்திய ஆய்வறிக்கையின் முக்கிய விபரங்களின் குறிப்புகள் பின் வருமாறு ;-

எதிர்காலத்து மாற்று எரிபொருள் சார்ந்த வாகனங்கள் தேவை என்பதனால் சூரிய ஒளி மற்றும் மின்சார கார்களுக்கான தேவை மிகவும் அதிகரிக்கும்.

தனிநபர் பயன்பாட்டிற்கு ஏற்ற கார்கள் குறைந்தவிடும் எனபதனால் உலகில் 95 சதவிகித மக்களிடம் கார்கள் இருக்காது. இதற்கு காரணம் கார்களின் விலை தற்பொழுது உள்ள நிலையை விட 10 மடங்காக உயரும் என தெரிவிக்கின்றது.

ஆனால் மரபு சார்ந்த எரிபொருள்களான பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் வாகனங்களை பராமரிப்பதை விட மின்சார வாகனங்களின் பராமரிப்பு 10 மடங்கு குறைவாகும்.

குறைந்தபட்ச ஆயுட்கால தேர்வுகளில் மின்சார வாகனங்கள் குறைந்தபட்ச ஆயுள் 16,10,240 கிமீ மற்றும் பெட்ரோல் டீசல் போன்வற்றில் இயங்கும் வாகனங்கள் குறைந்தபட்ச ஆயுள்  3,22,000 கிமீ ஆகும். இது வாகன துறையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

2025 முதல் தானியங்கி கார்கள், எலக்ட்ரிக் பேருந்துகள், டிரக்குகள், டிராக்டர்கள் என பெரும்பாலான பயன்பாட்டு வாகனங்கள் மின்சார வாகன துறையாக மாற்றமடையும்

பெட்ரோல் , டீசல் வாகனங்களிலிருந்து வெளிவரும் CO2 மற்றும் NOx போன்ற நச்சு வாயூக்களை தடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு வாகனங்கள் தயாரிக்கப்படும் நிலை உருவாகும் என்பதனால் அடுத்த சில வருடங்களில் படிப்படியாக டீசல் வாகனங்கள் குறையும், அதனை தொடர்ந்து பெட்ரோல் வாகனங்கள் குறையும் என ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மாற்றம் வாகன துறை மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் எண்ணெய் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என டோனி சேபா குறிப்பிடுகிறார்.

2020 ஆம் ஆண்டில் நாள் ஒன்றுக்கு 100 மில்லியன் கச்சா எண்ணெய் பீப்பாய்கள் தேவைப்படும். ஆனால் 2030 ஆம் ஆண்டில் இதன் தேவை வெறும் 70 மில்லியன் கச்சா எண்ணெய் பீப்பாய்களாக குறையும்.

2025 முதல் பெட்ரோல், டீசல் பயன்பாடு குறையும் என்பதனால் எண்ணெய் நிறுவனங்களின் எண்ணிக்கையும் குறைய தொடங்கும். இந்தியாவில் 2032 க்குள் நாடு முழுவதும் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை மட்டுமே இயக்குவதற்கான நடைமுறையை மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டு வருகின்றது.

Exit mobile version