இந்தியாவின் ஆய்லர் மோட்டார்ஸ் (Euler Motors) நிறுவனம் மேம்படுத்தப்பட்ட புதிய 2023 ஹைலோட் (Hiload EV) எலக்ட்ரிக் மூன்று சக்கர சரக்கு டிரக்கினை 170 கிமீ ரேஞ்சு பயணிக்கும் திறனுடன் 688 கிலோ சரக்கினை ஏற்றி செல்லும் திறனுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
புதிய ஹைலோட் மாடல் அதிகபட்சமாக 13 kWh பேட்டரி பேக் பெற்றதாக, 170 km கிலோமீட்டர் என ARAI சான்றளிக்கப்பட்டுள்ளது. நிகழ் நேரத்தில் சரக்கினை எடுத்துச் செல்லும் பொழுது 100-120 கிமீ வரை ரேஞ்சு கிடைக்கும் மற்றும் 30% அதிக பேலோட் திறன் (688 கிலோ) மற்றும் சந்தையில் விற்பனையில் கிடைக்கின்ற மற்ற மூன்று சக்கர மின்சார டிரக்கினை விட 30% கூடுதல் வருமானத்தை வழங்க என இந்நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
நிறுவனங்கள் மற்றும் இ-காமர்ஸ் வர்த்தகர்களுக்கு ஏற்ற, ஆய்லர் ஹைலோட் எலக்ட்ரிக் டிரக் முந்தைய 120 கன அடி சரக்கினை ஏற்றும் திறனுடன் கூடுதலாக புதிய 170 கன அடி அளவினை பெற்ற சரக்கு டிரக் மூலம் அதிக சுமையை ஏற்றலாம்.
அகலமான பரந்த விண்ட்ஷீல்டுகள் மற்றும் ஸ்லைடர் ஜன்னல்கள், குறைந்த வெளிச்சம் மற்றும் மூடுபனி உள்ள நேரங்களில் சிறந்த வெளிச்சம் வழங்கும் புதிய ஹாலஜென் ஹெட்லேம்ப், சிறந்த பிரேக்கிங் திறனை வெளிப்படுத்தும் 200மிமீ முன்புற டிஸ்க் பிரேக்குகள் சேர்க்கப்பட்டுள்ளது.
காப்புரிமை பெற்ற லிக்விட் கூலிங் மற்றும் DC ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட ஆய்லர் 13 kWh பேட்டரி பேக், புதிய AIS 156 திருத்தம் III பேஸ் 2 விதிமுறைகளுக்கு ஏற்றதாக தயாரிக்கப்பட்டுள்ளது.
ஹைலோடு PV, ஹைலோடு DV மற்றும் ஹைலோடு HD ஆகிய மூன்று வேரியண்டுகளில் ஹைலோடு EV 2023 மாடலுக்கான முன்பதிவுகள் துவங்கப்பட்டுள்ளது. ஹரியானாவில் உள்ள பல்வா ஆலையில் FY2024 நிதியாண்டில் 6000 யூனிட்டுகளுக்கு மேல் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.