ஆய்லர் மோட்டாரின் கீழ் புதியதாக எலக்ட்ரிக் பயணிகள் வாகனங்களுக்கான நியோ மூன்று சக்கர ஆட்டோரிக்ஷா மாடலில் ஹைரேஞ்ச் ஆரம்ப விலை ரூ.3,09,999 லட்சத்தில் துவங்குகின்ற நிலையில், ஹைரேஞ்ச் மேக்ஸ், பிளஸ் மற்றும் ஹைரேஞ்ச் என மூன்று விதமாக கிடைக்கின்றது.
இதுதவிர இந்நிறுவன பின்புறத்தில் கூடுதல் பூட்ஸ்பேஸ் பெற்ற ஹைசிட்டி என்ற மாடலையும் விற்பனை செய்ய துவங்கியுள்ளது. அடுத்த 3–4 மாதங்களில், ஆய்லர் மோட்டார்ஸ் இந்தியாவின் 50 நகரங்களில் NEO ஆட்டோவை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது, இது ரைட்-ஹெய்லிங் ஆபரேட்டர்கள், சுயதொழில் செய்யும் ஓட்டுநர்கள் மற்றும் ஃப்ளீட் வணிகங்களை இலக்காகக் கொண்டுள்ளது.
Euler Neo Hirange
9 kW LV AC PMSM மோட்டார், 65 Nm டார்க் வெளிப்படுத்துவதுடன் ஹில்-அசிஸ்ட், மற்றும் இந்திய சாலை நிலைமைகளுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்ட சேசிஸ் பெற்றுள்ள ஹைரேஞ்ச் மற்றும் ஹைசிட்டி ஆட்டோவிற்கு வித்தியாசம் என்னவென்றால் ஹைசிட்டியில் பூட்ஸ்பேஸ் ஆனது வழங்கப்பட்டுள்ளது.
ECO மற்றும் THUNDER டிரைவிங் மோடினை பொறுத்து அதிகபட்ச வேகம் மணிக்கு 43 கிமீ முதல் 60 கிமீ வரை இருக்கும்.
மூன்று வேரியண்டுகளின் விபரம் பின்வருமாறு.
Specification | NEO HiRANGE MAXX | NEO HiRANGE PLUS | NEO HiRANGE |
---|---|---|---|
ARAI Certified Range | 261 km | 204 km | 171 km |
Real World Range | 200+ km | 170+ km | 130+ km |
Top Speed | 45 Km/hr (ECO MODE) | 60 Km/hr (THUNDER MODE) | 45 Km/hr (ECO MODE) | 60 Km/hr (THUNDER MODE) | 43 Km/hr (ECO MODE) | 54 Km/hr (THUNDER MODE) |
Battery Type | Lithium-ion (Chassis integrated) | Lithium-ion (Chassis integrated) | Lithium-ion (Chassis integrated) |
Battery Capacity | 13.44 kWh | 11.56 kWh | 9.6 kWh |
Voltage / Pack | 67 Vdc | 58 Vdc | 48 Vdc |
Charging Time (10%–80%) | 3.25 hrs | 3.25 hrs | 3.25 hrs |
Motor Type | LV AC PMSM | LV AC PMSM | LV AC PMSM |
Motor Power (Peak) | 9 kW | 9 kW | 9 kW |
டாப் வேரியண்ட் ஆக உள்ள மாடலின் உண்மையான ரேஞ்ச் 200 கிமீ வரை வெளிப்படுத்தும் என்பது மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. இந்த வேரியண்ட் தினசரி நகரங்களில் இயக்க ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சிறந்த மாடலாகும். திருட்டு தடுக்கும் வசதி, GPS மற்றும் 6 ஆண்டுகள் / 1.75 லட்சம் கிமீ வரை உத்தரவாதம் வழங்கப்படுகின்றது.
இந்த நியோ ஆட்டோகளுக்கு போட்டியாக பியாஜியோ அபே எலக்ட்ரிக் வரிசை, முன்னணி பஜாஜ் கோகோ, டிவிஎஸ் மற்றும் மஹிந்திரா நிறுவனங்கள் உள்ளது. ஆய்லர் மோட்டாரின் 32.5% பங்குகளை ஹீரோ மோட்டோகார்ப் கொண்டுள்ளது.