Automobile Tamil

புதிய ஃபார்முலா 1 லோகோ அறிமுகம் – F1

வருகின்ற 2018 முதல் புதிய ஃபார்முலா 1 பந்தய லோகோ-வை நனடமுறைக்கு வரவுள்ளதால் புதிய F1 லோகோ அபு தாபியில் நடைபெற்ற கிரான்ட் பிரிக்ஸ் அரங்கில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

F1 லோகோ

லிபிர்ட்டி மீடியா கீழ் இனிசெயல்பட உள்ள ஃபார்முலா 1 பந்தயங்களில் புத்தம் புதிய லோகோ பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதால் 23 ஆண்டு காலமாக பயன்படுத்தப்பட்ட லோகோ இந்த ஆண்டுடன் நிறைவு பெறுகின்றது.

புதிய லோகோ அபு தாபியில் நடைபெற்ற F1 கிரான் பிரிக்ஸ் இறுதி போட்டியில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளதால், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள 2018 ஃபார்முலா 1 பந்தயங்கள் முதல் அதாவது மார்ச் 25, 2018 முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.

புதிய லோகோ வடிவமைப்பு குறித்து ஃபார்முலா 1 வர்த்தக பிரிவு தலைவர் கூறுகையில், மிக எளிமையான தோற்றத்தில் நவீன அம்சங்களுடன் கூடிய டிஜிட்டல் முறையில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது, மேலும் புதிய ஃபார்முலா1 லோகோ இரு ரேஸ் கார்கள் பந்தய களத்தில் வெற்றிக்கான எல்லைக் கோட்டை நோக்கி பயணிப்பத்தை பின்னணியாக கொண்டு கார்களின் லோ ப்ரஃபைலை அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

2018 ஆஸ்திரேலியா கிராண்ட் பிரிக்ஸ் போட்டிகள் மார்ச் 25, 2018 முதல் புதிய லோகோ, டிஜிட்டல் தரத்திலான நடைமுறைகளுடன் நவீனத்துவத்தை பெற்ற பிராண்டாக ஃபார்முலா 1 பந்தயம் தொடங்க உள்ளது.

Exit mobile version