Home Auto News

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200, எக்ஸ்பல்ஸ் 200T அறிமுக தேதி அறிவிப்பு

நீண்ட எதிர்பார்ப்புகளுக்குப் பிறகு புதிய ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200, ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200T பைக்குகள் மே 1 ஆம் தேதி வெளியிடப்பட உள்ள நிலையில், கூடுதலாக ஃபேரிங் செய்யப்பட்ட புதிய ஹீரோ HX200R பைக் மாடலும் வெளியிடப்பட உள்ளது.

எக்ஸ்ட்ரீம் 200ஆர் பைக்கின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ள அட்வென்சர் ரக புதிய எக்ஸ்பல்ஸ் 200, எக்ஸ்பல்ஸ் 200T பைக்குகளில் 200சிசி என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். முதன்முறையாக 2017 ஆம் ஆண்டு EICMA மோட்டார் சைக்கிள் கண்காட்சியில் எக்ஸ்பல்ஸ் 200 காட்சிப்படுத்தப்பட்டது.

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200

இந்திய சந்தையில் விற்பனைக்கு கிடைக்கின்ற எக்ஸ்ட்ரீம் 200ஆர் பைக்கில் கார்புரேட்டர் பெற்ற 200சிசி என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும் நிலையில், அட்வென்ச்சர் ரக வரிசையில் ஃப்யூவல் இன்ஜெக்‌ஷன் பொருத்தப்பட்டதாக அறியப்படுகின்றது.

அதிகபட்சமாக 18.4 பிஎஸ் குதிரைத்திறன் மற்றும்  17.1 Nm முறுக்கு விசை திறனை கொண்டதாக அமைந்திருக்கின்ற இந்த பைக்கில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும்.

இரு பைக்குகளிலும் 14 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் பொருத்தப்பட்டு உள்ளது.  இதன் மூலம் டேங்கை முழுமையாக நிரப்பினால், அதிகபட்சமாக 450 கிமீ வரை பயணிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்பக்கத்தில் வழங்கப்பட்டுள்ள 190 மிமீ பயணிக்கும் சஸ்பென்ஷன் , பின்புறத்தில் வழங்கப்படுள்ள ஒற்றை ஷாக் அப்சார்பர் அதிகபட்சமாக 170 மிமீ பயணிக்கும், இந்த பைக்கின் கிரவுண்ட் கிளியரன்ஸ் 200 மிமீ கொண்டிருப்பதுடன் டிஜிட்டல் இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டர் , ப்ளூடுத் ஆதரவு, சிங்கிள் சேனல் ஏபிஎஸ், எல்இடி ஹைட்லைட் அம்சத்தை பெற்றதாக அமைந்திருக்கும்.

ரூபாய் 1 லட்சம் விலைக்கு குறைவான அட்வென்சர் ரக மாடலாக பல்வேறு அம்சங்களை கொண்டதாக ஹீரோ நிறுவனத்தின் புதிய எக்ஸ்பல்ஸ்200 மற்றும் எக்ஸ்பல்ஸ்200T விளங்கும் என கருதப்படுகின்றது. அடுத்தப்படியாக ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் முழுவதும் ஃபேரிங் செய்யப்பட்ட ஹெச்எக்ஸ்200ஆர் பைக்கினை வெளியிட வாய்ப்புகள் உள்ளது.

இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற பிரசத்தி பெற்ற ராயல் என்ஃபீல்ட் ஹிமாலயன் மற்றும் பிஎம்டபிள்யூ ஜி310 ஜிஎஸ் போன்ற மாடல்களுக்கு போட்டியாக விளங்க உள்ளது.

Exit mobile version