இந்தியா ஹோண்டா டூவீலர் நிறுவனம் மிகவும் சக்திவாய்ந்த உயர்ரக அட்வென்ச்சர் டூரர் ஸ்போர்ட்டிவ் மாடலை ரூ.13.24 லட்சத்தில் ஹோண்டா ஆப்ரிக்கா ட்வீன் பைக்கினை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

Honda Bike

 ஹோண்டா ஆப்ரிக்கா ட்வீன் பைக்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் காட்சிப்பட்டுத்தப்பட்ட இந்த மாடல்  இந்திய சந்தைக்கு வந்துள்ளது. ஹோண்டா ஆப்ரிக்கா ட்வீன் 1000சிசி அட்வென்ச்சர் ரக ஸ்போர்ட்டிவ் பைக்கில் சர்வதேச அளவில் 998சிசி இஞ்ஜின் பெற்று 6 வேக DCT (Dual clutch Transmission )  ஆட்டோ பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது,

Honda Bike

94 bhp ஆற்றலை வெளிப்படுத்தும் 998சிசி லிக்யூடு கூல் பேரலல் ட்வீன் இஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 98 Nm ஆகும். இதில் 6 வேக DCT (Dual clutch Transmission )  ஆட்டோ பாக்ஸ் மற்றும் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. இந்தியாவில் உயர்ரக வேரியன்ட் மாடலான ஆட்டோ பாக்ஸ் மட்டுமே இடம்பெற்றுள்ளது.

Honda Bike

சிகேடி எனப்படும் பாகங்களை தருவித்து ஒருங்கிணைப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த மோட்டார்சைக்கிளில் அன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம் (ABS) மற்றும் ஸ்டாண்டர்டு ஹோண்டா செலக்டெபிள் டார்க் கன்ட்ரோல் ( standard Honda Selectable Torque Control – HSTC ) இடம்பெற்றிருக்கும்.

முன்பக்க டயரில் 310மிமீ இரட்டை டிஸ்க் பிரேக்  மற்றும் பின்பக்க டயரில் 256 மிமீ சிங்கிள் டிஸ்க் பிரேக் இடம்பெற்றுள்ளது. முன்பக்கத்தில் 9 இன்ச் வரை பயணிக்ககூடிய அப்-சைட் டவுன் ஃபோர்க்குகள் மற்றும் பின்பக்கத்தில் 8.7 இன்ச் பயணிக்ககூடிய  அட்ஜெஸ்டபிள் ரியர் மோனோஷாக் அப்சார்பரினை பெற்று விளங்குவதனால் சிறப்பான ஆஃப்ரோடு அனுபவத்தினை பெறலாம்.

Honda Bike

முதற்கட்டமாக 50 பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளது.  ஹோண்டா ஆப்பிரிக்கா ட்வீன் பைக் ரூ. 13.24 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் சென்னை) மற்றும் ரூ. 13.25 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் சென்னை)

ஹோண்டா விங் டீலர்கள்

ஹோண்டா விங் டீலர்கள் வழியாக மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ள ஆப்பிரிக்கா ட்வீன் பைக்கின் 22 டீலர்கள் வாயிலாக மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளது. தமிழகத்தில் சென்னை மற்றும் கோவை நகரங்களில் முதற்கட்டமாக கிடைக்க உள்ளது. தற்பொழுது முதல் பேட்சில் 50 அலகுகள் மட்டுமே நாடு முழுவதும் முன்பதிவு செய்ய வழங்கப்பட்டுள்ளது.

Honda Bike