hyundai exter new=
இந்தியாவின் முன்னணி பயணிகள் வாகன தயாரிப்பாளரான ஹூண்டாய் இந்தியாவின் வருடாந்திர இறுதி மாத கொண்டாட்டத்தை முன்னிட்டு December Delight என்ற பெயரில் தனது மாடல்களுக்கு அதிகபட்ச சலுகையாக எக்ஸ்டருக்கு ரூ.85,000 வரை மற்றும் ஜிஎஸ்டி 2.0 சலுகைகளை இணைத்து ஒட்டுமொத்தமாக ரூ.1.74 லட்சம் வரை கிடைக்கும் என குறிப்பிடுகின்றது.
இந்த சலுகைகள் ஸ்டாக் இருக்கும் வரை மட்டுமே செல்லுபடியாகும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே, புத்தாண்டிற்கு புதிய கார் வாங்கத் திட்டமிடுபவர்கள் உடனே ஷோரூமை அணுகலாம்..!
சலுகைகளின் விபரம் பின்வருமாறு;-
1. ஹூண்டாய் எக்ஸ்டர் காருக்கு அதிகபட்ச சலுகை! இந்த மாதத்தின் மிகச்சிறந்த ஆஃபர் எக்ஸ்டர் காருக்குத் தான் கிடைக்கிறது. ஜிஎஸ்டி குறைப்பு: ₹89,209 வரை கூடுதல் சலுகைகள்: ₹85,000 வரை மொத்த லாபம்: ₹1,74,209 கிடைக்கின்றது.
2. ஹூண்டாய் i20 பிரீமியம் ஹேட்ச்பேக் விரும்பிகளுக்கு ஜிஎஸ்டி குறைப்பு: ₹98,053 வரை கூடுதல் சலுகைகள்: ₹70,000 வரை மொத்த லாபம்: ₹1,68,053 வரை கிடைக்கிறது.
3. கிராண்ட் i10 நியோஸ் சிறிய காரில் சுமார் ரூ.1.43 லட்சம் வரை மிச்சப்படுத்தலாம். ஜிஎஸ்டி குறைப்பு: ₹73,808 வரை கூடுதல் சலுகைகள்: ₹70,000 வரை மொத்த லாபம்: ₹1,43,808 வரை வழங்கப்படுகின்றது.
4. ஹூண்டாய் வெர்னா செடானுக்கு ஜிஎஸ்டி குறைப்பு: ₹60,640 வரை கூடுதல் சலுகைகள்: ₹75,000 வரை மொத்த லாபம்: ₹1,35,640 வரை உள்ளது.
5. ஹூண்டாய் அல்கசாருக்கு ஜிஎஸ்டி குறைப்பு: ₹75,376 வரை கூடுதல் சலுகைகள்: ₹40,000 வரை மொத்த லாபம்: ₹1,15,376 வரை உள்ளது.
6. இறுதியாக ஹூண்டாய் ஆரா ஜிஎஸ்டி குறைப்பு: ₹78,465 வரை கூடுதல் சலுகைகள்: ₹33,000 வரை மொத்த லாபம்: ₹1,11,465 வரை உள்ளது.
ஆனால் இந்நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற க்ரெட்டா எஸ்யூவிக்கு எந்த சலுகையும் அறிவிக்கப்படவில்லை.

