விற்பனையில் உள்ள சிரோஸ் ICE ரக மாடலை அடிப்படையாக கொண்டு மின் வாகனமாக தயாரிக்கப்பட்டு வரும் கியா சிரோஸ் EV இந்தியாவில் 2026 ஆம் ஆண்டின் துவக்க மாதம் அல்லது முதல் காலாண்டின் இறுதியில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சமீபத்தில் கியா இந்திய சந்தையில் காரன்ஸ் கிளாவிஸ் இவி மாடலை வெளியிட்டுள்ளதால், இதன் அடிப்படையிலான பேட்டரி, நுட்ப விபரங்களை சிரோஸ் பகிர்ந்து கொள்ளலாம் அல்லது சர்வதேச அளவில் உள்ள ஹூண்டாய் இன்ஸ்டெர் பேட்டரியை பகிர வாய்ப்புள்ளது.
Kia Syros EV எதிர்பார்ப்புகள்
முழுமையாக மறைக்கப்பட்ட தோற்றத்தில் சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டுள்ள இந்த மாடலின் வடிவமைப்பு சிரோஸ் போலவே பாக்ஸி வடிவமைப்பினை கொண்டு மிக நேர்த்தியாக எலக்ட்ரிக் கியா கார்களில் பயன்படுத்துகின்ற அலாய் வீல் பெற்றதாக அமைந்துள்ளது.
காரன்ஸ் கிளாவிஸ் இவி பேட்டரி பகிர்ந்து கொள்ள வில்லை என்றால் , ஹூண்டாயின் இன்ஸ்டெர் இவி அடிப்படையிலான 42kWh மற்றும் 49kWh பேட்டரி பேக்கினை பெற்றால் தோராயமாக ரேஞ்ச் WLTP தரவுகளின் படி முறையே 300 மற்றும் 355 கிமீ ரேஞ்ச் வழங்கலாம்.
பாதுகாப்பு சார்ந்தவற்றில் 6 ஏர்பேக்குகளுடன் லெவல் 2 ADAS மற்றும் 360-டிகிரி கேமரா அமைப்பு போன்றவை பெற்று இன்டீரியரில் தற்பொழுதுள்ள இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் இன்ஸ்ட்ரூமென்டேஷனுக்கான இரட்டை 12.3-இன்ச் திரைகள், பனோரமிக் சன்ரூஃப் ஆகியவை கொண்டிருக்கலாம்.