உலக கார் விற்பனை நிலவரம் – முதல் காலாண்டு 2016

0

2016 ஆம் நிதி ஆண்டின் முதல் காலாண்டு முடிவில் உலகயளவில் கார் விற்பனை 2.8 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது. உலக கார் விற்பனையில் சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகள் சிறப்பான வளர்ச்சி பெற்றுள்ளது. எஸ்யூவி ரக மாடல்களின் விற்பனை வளர்ச்சி அடைந்துள்ளது.

2017-Toyota-Corolla-altis

Google News

முதல் நிதி காலாண்டின் முடிவில் மொத்தம் 20.44 மில்லியன் பயணிகள் வாகனம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டின் இதே காலாண்டை ஒப்பீடுகையில் 558,700 வாகனங்கள் கூடுதலாக அதாவது 2.8 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

ஜெடூ டைனமிக்ஸ் வெளியிட்டுள்ள விற்பனை புள்ளிவிபரங்களில் முதல் காலாண்டு (ஏப்ரல் ,மே ,ஜூன்) முடிவில் அதிக கார்கள் விற்பனையில் சீனா முதலிடத்தில் உள்ளது. அதனை தொடர்ந்து அமெரிக்கா , ஜப்பான் போன்றவை உள்ளது. இந்தியா 6வது இடத்தில் உள்ளது.

top-10-car-brands-q1-2016

முதல் காலாண்டின் முடிவில் டொயோட்டா நிறுவனம் சீரான விற்பனையுடன் முதலிடத்தினை பிடித்துள்ளது. அதனை தொடர்ந்து ஃபோக்ஸ்வேகன் 1 சதவீத வீழ்ச்சி பெற்று இரண்டாமிடத்தில் உள்ளது. சரிவினை சந்தித்து வரும் நிறுவனங்கள் ஃபோக்ஸ்வேகன் ,ஹூண்டாய் ,செவர்லே மற்றும் வளர்ச்சி அடைந்து வரும் நிறுவனங்கள் ஃபோர்டு ,ஹோண்டா , மெர்சிடிஸ் ,கியா , நிசான் போன்ற நிறுவனங்களாகும்.

குழுமங்களின் அடிப்படையில் கார் விற்பனை டாப் 25 நிறுவனங்கள்

top-25-world's-car-groups-q1-2016

இந்த பட்டியலில் இந்தியாவை சேர்ந்த மஹிந்திரா & மஹிந்திரா 16 சதவீத வளர்ச்சி பெற்று பட்டியலில் 23வது இடத்திலும் மற்றொரு இந்திய நிறுவனம் டாடா 9சதவீத வளர்சி பெற்று பட்டியலில் 21வது இடத்திலும் உள்ளது. மாருதி சுசூகி பட்டியலில் 10 வது இடத்தினை பெற்றுள்ளது.

உலக அரங்கில் டாப் 25 கார் பட்டியல் – Q1 ,2016

top-25-world's-best-selling-cars

விற்பனையில் சிறந்துவிளங்கும் டாப் 25 கார்களில் டொயோட்டா கரொல்லா , ஊல்லிங் ஹாங் குவாங் (செவர்லே என்ஜாய்) , ஹோண்டா சிஆர்-வி , டொயோட்டா கேம்ரி , ஃபோக்ஸ்வேகன் போலோ , ஹூண்டாய் எலன்ட்ரா , ஃபோக்ஸ்வேகன் ஜெட்டா , ஹோண்டா ஜாஸ் , மாருதி சுசூகி ஸ்விஃப்ட் போன்ற மாடல்கள் இந்தியாவில் விற்பனையில் உள்ளது. நிசான் எக்ஸ்-ட்ரெயில் , ஹூண்டாய் டூசான் மாடல்கள் இந்தியாவில் அடுத்த சில மாதங்களில் விற்பனைக்கு வரவுள்ளது.