ஹீரோ பைக்குகள் விலை ரூ.2200 வரை உயர்வு

0

இந்தியாவின் முன்னணி தயாரிப்பாளரான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தன்னுடைய பைக் மாடல்களின் விலை ரூபாய் 500 முதல் அதிகபட்சமாக ரூபாய் 2200 வரை உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வு மே 1 முதல் அமலுக்கு வந்துள்ளது.

2017 Hero Glamour FI fuel injected side

Google News

ஹீரோ பைக்குகள் விலை

ஹீரோ நிறுவனம் கடந்த 2016 ஏப்ரல் மாதம் 612,739 இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்திருந்த நிலையில் இதே காலகட்டத்தில் ஏப்ரல் 2017ல்  591,306 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்து 3.49 சதவீத வீழ்ச்சி அடைந்துள்ளது. சந்தையில் தொடர் வீழ்ச்சி அடைந்திருந்த பொழுதும் விலையை ஹீரோ உயர்த்தியுள்ளது.

ரூ. 500 விலையை அடிப்படை HF  டான் மாடலுக்கும் அதிகபட்சமாக ரூ.2200 வரையிரான விலையை ஹீரோ கரீஷ்மா மாடலுக்கும் உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வு மே 1ந் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

hero xtreme 200s 3

அடுத்த வருடம் முதல் பிரிமியம் சந்தையை குறிவைத்து ஹீரோ எக்ஸ்டீரிம் 200 எஸ் , ஹெச்எக்ஸ்250ஆர் போன்ற மாடல்களுடன் ஸ்கூட்டர்களையும் களமிறக்க ஹீரோ திட்டமிட்டுள்ளது.