மாதந்திர கார் விற்பனை நிலவரம் – ஆகஸ்ட் 2016 – updated

0

2016 ஆகஸ்ட் கார் விற்பனையில் கார் நிறுவனங்களின் விற்பனை மற்றும் வளர்ச்சி பற்றி தெரிந்து கொள்ளலாம். மாருதி சுசூகி , ரெனோ , நிசான் , டொயோட்டா , மஹிந்திரா போன்ற நிறுவனங்கள் அபரிதமான வளர்ச்சியை அடைந்துள்ளது.

maruti-vitara-brezza

Google News

மாருதி சுசூகி 

இந்தியாவின் முதன்மையான கார் தயாரிப்பாளரான மாருதி சுசூகி நிறுவனம் கடந்த ஆகஸ்ட் 2015யில் 1.17 லட்சம் கார்களை விற்பனை செய்திருந்த நிலையில் 2016 ஆகஸ்ட் மாதத்தில் 1.32 லட்சம் கார்களை விற்பனை செய்து 12.2 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது. விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் பலேனோ போன்ற கார்கள் முக்கியமானவையாகும். மேலும் யூட்டிலிட்டி ரக வாகன பிரிவில் கடந்த ஆகஸ்டை விட 114 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது.

ரெனால்ட் 

ரெனோ நிறுவனம் கடந்த 2015 ஆகஸ்ட் மாத விற்பனையில் 1527 அலகுகள் விற்பனை செய்திருந்த நிலையில் இந்த ஆகஸ்டில் 227 சதவீத கூடுதலாக வளர்ச்சி பெற்று 12972 கார்கள் விற்பனை செய்துள்ளது. ரெனோ க்விட் மற்றும் டஸ்ட்டர் போன்ற கார்கள் முக்கிய பங்காற்றுகின்றன.

renault kwid sideview

நிசான்

நிசான்  நிறுவனம் ஆகஸ்ட் 2015ல் 2809 அலகுகள் விற்பனை செய்திருந்த நிலையில் ஆகஸ்ட் 2016ல் 5,918 கார்களை விற்பனை செய்து 111 சதவீத வளர்ச்சி பெற்றுள்ளது.

nissan-terrano-special-edition

டொயோட்டா

டொயோட்டா கிரிலோஷ்கர் நிறுவனம் ஆகஸ்ட் 2015ல் 12,547 அலகுகள் விற்பனை செய்திருந்த நிலையில் ஆகஸ்ட் 2016ல் 14,045 கார்களை விற்பனை செய்து 11.9 சதவீத வளர்ச்சி பெற்றுள்ளது. இவற்றில் ஏற்றுமதி செய்யப்பட்ட எட்டியோஸ் கார்களின் எண்ணிக்கை 1244 ஆகும்.

toyota-innova-crysta-mpv

மஹிந்திரா

இந்தியாவின் மஹிந்திரா நிறுவனம் பயணிகள் கார் மற்றும் வர்த்தக வாகன பிரிவு என ஏற்றுமதி ஆகியவற்றுடன் சேர்த்து ஆகஸ்ட் 2015ல் 35,634 அலகுகள் விற்பனை செய்திருந்த நிலையில் ஆகஸ்ட் 2016ல் 40,591 வாகனங்களை விற்பனை செய்து 14 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது.  பயணிகள் கார் பிரிவில் ஆகஸ்ட் 2015ல் 14,198 அலகுகள் விற்பனை செய்திருந்த நிலையில் ஆகஸ்ட் 2016ல் 18,246 கார்களை விற்பனை செய்து 29 சதவீத வளர்ச்சி பெற்றுள்ளது.

mahindra_kuv100

ஹோண்டா கார்ஸ் இந்தியா

ஹோண்டா கார் நிறுவனம் கடந்த ஆகஸ்ட் ஆகஸ்ட் 2015ல் 15,655 அலகுகள் விற்பனை செய்திருந்த நிலையில் ஆகஸ்ட் 2016ல் 13,941 கார்களை விற்பனை செய்து 11 சதவீத வீழ்ச்சியை உள்நாட்டில் பதிவு செய்துள்ளது.  ஆகஸ்ட் 2015 ஏற்றுமதி 554 கார்கள் 2016 ஆகஸ்டில் 664 கார்கள் என ஏற்றுமதியில் 12 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது.

honda-br-v-suv-car

டாடா மோட்டார்ஸ்

டாடா நிறுவனம் பயணிகள் கார் மற்றும் வர்த்தக வாகன பிரிவு என ஏற்றுமதி ஆகியவற்றுடன் சேர்த்து ஆகஸ்ட் 2015ல் 40,679 அலகுகள் விற்பனை செய்திருந்த நிலையில் ஆகஸ்ட் 2016ல் 43,061 வாகனங்களை விற்பனை செய்து 6 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது. பயணிகள் வாகன பிரிவில் ஆகஸ்ட் 2015ல் 11,163 அலகுகள் விற்பனை செய்திருந்த நிலையில் ஆகஸ்ட் 2016ல் 13,002 கார்களை விற்பனை செய்து 16 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

tata-tiago