சூப்பர் ஸ்போர்ட்ஸ் பைக் பிரிவில் முன்னிலை வகிக்கும் பஜாஜ்

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் சூப்பர் ஸ்போர்ட்ஸ் பைக் விற்பனையில் முன்னிலை வகிக்கின்றது. கடந்த 2 வருடங்களில் 10 % இருந்து 59 % வரை உயர்ந்துள்ளதாக பஜாஜ் ஆட்டோ தெரிவித்துள்ளது.

கேடிஎம்  390 டியூக்

கடந்த ஜூன் 2013 ஆண்டில் 10 சதவீதமாக இருந்த ஸ்போர்ட்ஸ் பைக் விற்பனை தற்பொழுது 59 சதவீதமாக மே 2015யில் வளர்ந்துள்ளது. ரூ.1 லட்சதிற்க்கு மேல் உள்ள பைக்குகளை மட்டும் ஸ்போர்ட்ஸ் பைக்களாக கணக்கில் எடுத்து கொண்டு இந்த புள்ளிவிவரத்தினை பஜாஜ் ஆட்டோ தயாரித்துள்ளது.

பஜாஜ் சக்கன் ஆலையில் கேடிஎம் 200 டியூக் பைக் மற்றும் ஆர்எஸ்200 பைக்குகள் தயாரிக்கப்படுகின்றன. மற்ற பைக்குகளான கேடிஎம் 390 டியூக் , கேடிஎம் ஆர்சி200 , ஆர்சி390 மற்றும் கவாஸாகி 300R மற்றும் 650R என சூப்பர் ஸ்போர்ட்ஸ் பைக் விற்பனை செய்து வருகின்றது.

சமீபத்தில் விற்பனைக்கு வந்த பல்சர் RS200 பைக் கடந்த இரண்டு மாதங்களில் 7000 முன்பதிவு பெற்றுள்ளது. அவற்றில் ஆர்எஸ்200 ஏபிஎஸ் பிரேக் மாடலுக்கு 3500 முன்பதிவு நடந்துள்ளது.

பஜாஜ் ஆட்டோ முதலீட்டாளர் சந்திப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் பைக் சந்தையை மைலேஜ் மற்றும் சூப்பர் ஸ்போர்ட்ஸ் பைக் பிரிவு என இரண்டாக பிரித்துள்ளது.

M என்ற குறீயிட்டு பிரிவில் பிரிக்கப்பட்டுள்ள மைலேஜ் பைக்குகள் 100சிசி முதல் 150சிசி வரை பிரிக்கப்பட்டுள்ளது. அதற்க்கு மேல் உள்ள 150 சிசிக்கு மேல் உள்ளவைகள் S என ஸ்போர்ட்ஸ் பிரிவில் வகைப்படுத்தியுள்ளனர் P என்ற பிரிவில் பிரிமியம் பைக்குகள் வகைப்படுத்துப்பட்டுள்ளது.

பஜாஜ் ஆட்டோ

இந்த படத்தில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

M – மைலேஜ்

M1 பிரிவில்  100சிசி தொடக்க நிலை ரூ.44.000 வரை பைக்குகள்  வரிசைப்படுத்தியுள்ளனர். M2 100சிசி ரூ.44,000 முதல் 51,000வரை வகைப்படுத்தியுள்ளனர். M3 125சிசி முதல் 150சிசி வரையிலான ரூ.49,000 முதல் 60,000 விலை உள்ள பைக்குகள் ஆகும்.

S- ஸ்போர்ட்ஸ் 

S1 பிரிவில்  150சிசி முதல் 225சிசி வரையிலான  தொடக்க நிலை ஸ்போர்ட்ஸ் பைக்கில் ரூ.60.000 முதல் ரூ.1,00,000 வரை பைக்குகள் வரிசைப்படுத்தியுள்ளனர்.
S2 150சிசி முதல் 500சிசி வரையிலான ரூ.1,00,000 முதல் 1.75 லட்ச வரை வகைப்படுத்தியுள்ளனர். S3 250சிசி முதல் 500சிசி வரையிலான நவீன வசதிகள் கொண்ட பைக்குள் அடங்கும். P  பிரிமியம் ரக பைக்குள் ஆகும்.

மேலும் கடந்த டிசம்பர் 2014 விற்பனை நிலவரப்படி  மாதம் 9.3 லட்ச பைக்குகள் விற்பனை செய்யப்படுகின்றது. அவற்றில் 82% அதாவது 7.6 லட்சம் பைக்குகள் மைலேஜ் அதாவது M பிரிவில் விற்பனை செய்ப்படுகின்றது. S பிரிவான ஸ்போர்ட்ஸ் பைக் பிரிவில் 18% அதாவது 1.7 லட்ச பைக்குகளும் , பிரிமியம் பைக் பிரிவு P வகையில் 0.1% அதாவது 750 பைக்குகள் விற்பனை ஆகின்றது.

பஜாஜ் ஆட்டோ

இந்த படத்தில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

சூப்பர் ஸ்போர்ட்ஸ் பைக் பிரிவில் தொடக்கநிலையான S1 பிரிவில் 44 % சந்தையை பல்சர் வரிசை பைக்குகள் பெற்றுள்ளன. S2 பிரிவில் கேடிஎம் ரக பைக்குகள் உள்ளன. இதற்க்கு போட்டியாக ராயல் என்ஃபீலடு மற்றும் யமஹா உள்ளது.

S3 பிரிவில் கேடிஎம் மாடல்கள் உள்ளன இதற்க்கு போட்டியாக ராயல் என்ஃபீலடு மற்றும் ஹோண்டா உள்ளது.

P பிரிவில் ஹார்லி டேவிட்சன் முன்னிலை வகிக்கின்றது.

பஜாஜ் ஸ்போர்ட்ஸ் பைக்குகளுக்கு போட்டியாக  யமஹா மற்றும் ஹோண்டா உள்ளது

Bajaj claims top in super-sports motorcycle segment