ஜிஎஸ்டி வரி : வர்த்தக வாகனங்கள் விலை உயருமா ?

நாளை முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட உள்ள ஜிஎஸ்டி வரி எனப்படும் ஒரே தேசம் ஒரே வரி என அழைக்கப்படுகின்ற சரக்குகள் மற்றும் சேவைகள் வரியின் காரணமாக வர்த்தக வாகனங்களில் விலை கடுமையாக உயர்வடையும் வாய்ப்புகள் உள்ளது.

 ஜிஎஸ்டி வர்த்தக வாகனங்கள்

இந்தியாவில் ஜிஎஸ்டி எனப்படும் ஒருமுனை வரி இன்றிரவு 12 மணிக்கு அமல்படுத்தப்பட உள்ளதால் பல்வேறு துறைகளில் விலை மாற்றங்கள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ள நிலையில் மோட்டார் உலகில் நிகழ உள்ள மாற்றங்களை பற்றி அறிந்து வருகின்றோம்.

சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜிஎஸ்டி எனும் வரி விதிப்பின் மூலம் நாடு முழுவதும் ஒரே சீரான வரிமுறையை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன் அடிப்படையில்5%, 12 %, 18% மற்றும் 28 % என  4 விதமான பிரிவுகளில் சரக்குகள் மற்றும் சேவைகளுக்காக வரி விதிப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நான்கு பிரிவுகளில் ஆட்டோமொபைல் துறைக்கு ஜிஎஸ்டி வரி 28 சதவீதம் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதால் கார்கள் , இருசக்கர வாகனங்கள்,வர்த்தக வாகனங்கள், ஆடம்பர படகுகள் உள்பட அனைத்து  மோட்டார் துறையைச் சேர்ந்த வாகனங்கள் மற்றும் உதிரிபாகங்கள் என அனைத்திற்கும் ஒரே பிரிவு வழங்கப்பட்டுள்ளது. இவற்றில்  டிராக்டர் மற்றும் மின்சார கார்களுக்கு 12 சதவிகித பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது.

டிரக்குகள், லாரிகள் , மினி டிரக்குகள்

உள்நாட்டில் பொருட்களை கொண்டு செல்வதற்கு மிகவும் உதவிகரமாக அமைந்துள்ள டிரக்குகளுக்கு தற்போது விதிக்கப்படுகின்ற வரி மாநிலம் வாரியாக மாறுபட்டாலும் சராசரியாக 30.2 சதவிகிதமாக உள்ளது.

நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள ஜிஎஸ்டி-யின் காரணமாக வர்த்தக வாகனங்களில் இலகுரக டிரக்குகள், கனரக வாகனங்கள் போன்றவற்றுக்கு 28 சதவிகிதம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 2.2 சதவிகிதம் வரி குறைக்கப்படுவதனால் கனிசமாக விலை குறையும் வாய்ப்புகள் உள்ளது.

ஆனால் பொது போக்குவரத்து வாகனங்களான பேருந்துகள், 10 அல்லது அதற்கு மேற்பட்ட இருக்கைகள் கொண்ட வேன் போன்ற வாகனங்களுக்கு 28 சதவிகித வரியுடன் கூடுதலாக 15 சதவிகிதம் விதிக்கப்பட்டுள்ளதால் 43 சதவிதிமாக உயர்ந்துள்ளது.

மூன்று சக்கர வாகனங்கள் பிரிவில் தற்போது விதிக்கப்படுகின்ற வரி முறையில் 29.1 சதவிகிதம் வசூலிக்கப்படும் நிலையில் புதிய ஜிஎஸ்டி-க்கு  பிறகு 28 சதவிகிதம் என அறிவிக்கப்பட்டுள்ளதன் காரணமாக கனிசமாக மூன்று சக்கர வாகனங்கள் விலை குறையும்.

தொடர்ந்து நமது தளத்தில் ஜிஎஸ்டி தொடர்பாக வெளிவந்த அனைத்து செய்திகளையும் வாசிக்க இங்கே க்ளிக் செய்க — > மோட்டார்  ஜிஎஸ்டி வரி

 

Recommended For You