டாடா டீகோர் மற்றும் டியாகோ கார்களுக்கு சிறப்பான வரவேற்பு

0

இந்தியாவின் டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகன பிரிவு நிறுவனத்தின்  டாடா டீகோர் செடான் மற்றும் டாடா டியாகோ ஹேட்ச்பேக் என இரு மாடல்களும் சிறப்பான வரவேற்பினை சந்தையில் பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

tata tigor rear

Google News

டீகோர் காரின் டாப் வேரியன்ட் மாடல்களுக்கு அதிகமான காத்திருப்பு காலமும், டியாகோ ஏஎம்டி மாடலுக்கு சிறப்பான ஆதரவு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

டாடா டீகோர்

டாடா நிறுவனத்தின் புதிய இம்பேக்ட் டிசைன் வடிவ தாத்பரியங்களில் வடிவமைக்கப்பட்ட முதல் மாடலாக வெளிவந்த டியாகோ சிறப்பான வரவேற்பினை பெற்ற வந்ததை தொடர்ந்து இதில் ஆட்டோமேட்டேட் மேனுவல் கியர்பாக்ஸ் எனப்படும் ஏஎம்டி பொருத்தப்பட்ட பெட்ரோல் மாடலுக்கு அதிகபட்சமாக 4 வாரங்கள் வரை காத்திருப்பு காலம் உள்ளது.

tata tigor interior

சமீபத்தில் ஸ்டைல்பேக் எனப்படும் கூபே ரகத்தின் அடிப்படையிலான பூட் அமைப்பை பெற்ற டியாகோ காரின் அடிப்படையிலான செடான் ரக மாடலில் XZ மற்றும் XZ(O) வேரியன்ட்களின் காத்திருப்பு காலம் 4 முதல் 5 வாரங்கள் வரை அதிகரித்துள்ளதாம். மேலும் விரைவில் டீகோர் காரிலும் ஏஎம்டி மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இரு மாடல்களிலும் இடம்பெற்றுள்ள எஞ்சின் விபரம்

69 bhp ஆற்றலை வழங்கும் புதிய 1.05 லிட்டர் ரெவோடார்க் என்ஜின் டார்க் 140 Nm ஆகும். சிட்டி மற்றும் இக்கோ இரண்டு விதமான டிரைவிங் ஆப்ஷன் உள்ளது. 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

tata tiago

டாடா போல்ட் , ஸெஸ்ட் கார்களில் பயன்படுத்தப்பட்டுள்ள அதே 1.2 லிட்டர் ரெவோட்ரான் என்ஜின் ஆற்றல் 83.8பிஹெச்பி மற்றும் டார்க் 114 என்எம் ஆகும். சிட்டி மற்றும் இக்கோ இரண்டு விதமான டிரைவிங் ஆப்ஷன் உள்ளது. 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

டாடா நிறுவனத்தின் அடுத்த புதிய மாடலாக டாடா நெக்ஸான் எஸ்யூவி மாடல் பண்டிகை காலத்தின் மத்தியில் விற்பனைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

tata nexon suv