டியாகோ பெட்ரோல் காருக்கு நல்ல வரவேற்பு

டாடா மோட்டார்சின் புதிய டாடா டியாகோ கார் சிறப்பான வரவேற்பினை பெற்று டாடாவின் பயணிகள் வாகன சந்தையில் நல்லதொரு வளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.எதிர்பார்த்த டீசல் கார் விற்பனையை விட டியாகோ பெட்ரோல் மாடலுக்கே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

டாடா-டியாகோ

 

டியாகோ கார் கடந்த  ஏப்ரல் மாத விற்பனையில் 3022 கார்கள் விற்பனை ஆகியிருந்தது. மேலும் மே மாத விற்பனையிலும் 7 % வளர்ச்சியை டாடா ஹேட்ச்பேக் கார் மாடல்கள் பெற்று மொத்தம் 5643 கார்கள் விற்பனை ஆகியுள்ளது.

டியாகோ காருக்கு 20,000 முன்பதிவுகள் கடந்துள்ள நிலையில் மொத்த முன்பதிவில் 70 முதல் 80 சதவீத வாகனங்கள் பெட்ரோல் மாடலுக்கான முன்பதிவு என தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி மற்றும் கேரளாவில் தொடரும் டீசல் கார் தடை மற்ற முக்கிய நகரங்களுக்கு விரிவடைய வாய்ப்புள்ளதால் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் பெட்ரோல் மாடலுக்கு முக்கியத்துவம் கொடுக்க தொடங்கியுள்ளனர்.

9பிஹெச்பி ஆற்றலை வழங்கும் புதிய 1.05 லிட்டர் ரெவோடார்க் என்ஜின் டார்க் 140என்எம் ஆகும். சிட்டி மற்றும் இக்கோ இரண்டு விதமான டிரைவிங் ஆப்ஷன் உள்ளது. 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

டாடா போல்ட் , ஸெஸ்ட் கார்களில் பயன்படுத்தப்பட்டுள்ள அதே 1.2 லிட்டர் ரெவோட்ரான் என்ஜின் ஆற்றல் 83.8பிஹெச்பி மற்றும் டார்க் 114 என்எம் ஆகும். சிட்டி மற்றும் இக்கோ இரண்டு விதமான டிரைவிங் ஆப்ஷன் உள்ளது. 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

டாடா டியாகோ கார் விமர்சனம்

Tata Tiago car Photo Gallery

[envira-gallery id=”3889″]

தகவல் : thehindu